Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 10, 2024

லஞ்ச்க்கு வெளியே போகக்கூடாது: ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி ( தினமலர்)

சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ஆன்மிக உரை நிகழ்த்திய பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளி ஆசிரியரை விமர்சித்ததாக, போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து, அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* பள்ளி வளாகத்துக்குள் வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது. அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர், மாணவர்களிடம் நேரடியாக பேச அனுமதிக்கக்கூடாது

* முதன்மை கல்வி அதிகாரி அனுமதி இல்லாமல், கல்வி சாரா நிகழ்ச்சியையோ, விழாவையோ பள்ளியில் நடத்தக்கூடாது

* தேசிய சுகாதார இயக்கக மருத்துவ குழுவினரை தவிர, மற்ற குழுவினரை மாணவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்கக்கூடாது

* முதன்மை கல்வி அதிகாரி அனுமதி இல்லாமல், போட்டிகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு, மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது. வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுகிறது

* அரசு ஊதியம் பெறும் தற்காலிக ஆசிரியர்கள் உள்ளிட்டோரை தவிர, மற்றவர்களை பாடங்கள் நடத்த அனுமதித்தால், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

* மதிய உணவுக்காக ஆசிரியர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களிடம் எதிர்மறையாகவோ, இரட்டை அர்த்தத்திலோ, தொலைபேசியிலோ பேசக்கூடாது. மாணவர்கள் வருகை தொடர்பாக, பெற்றோரிடம் மட்டுமே பேச வேண்டும்

* விடுமுறை நாட்களில், பள்ளியில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை. முதன்மை கல்வி அலுவலர் அதிகாரி மட்டுமே, அரசு நிகழ்ச்சியை அனுமதிக்கலாம்.

இவ்வாறு, தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News