Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 13, 2024

ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை? - அன்பில் மகேஷ்!


தமிழ்நாட்டில் அரசு பள்ளி வளாகத்திற்குள் தேவை இல்லாதவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவாதாவும், 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கல்வி திட்டம் சிறப்பாக உள்ளது என்று மத்திய அரசு பாராட்டி உள்ளதாகவும், ஆனால் மத்திய அரசு கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறினார். இதன் காரணமாக 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என்றும், கல்விக்கான 60 சதவீதம் நிதியை மத்திய அரசு தான் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தினால்தான் நிதி வழங்க முடியும் என மத்திய அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர், தமிழகத்தில் அண்ணா, கருணாநிதி ஆகியோர் ஏற்கனவே இருமொழி கொள்கை மூலம் சமச்சீர் கல்வி கொள்கையை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு பள்ளி வளாகத்திற்குள் தேவை இல்லாதவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது என்றும், பள்ளி வளாகத்திற்குள் புகுந்து சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளதால் இதுவரை ஒன்றரை லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாக கூறினார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News