Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 23, 2024

தலைமுடி அதிகமா கொட்டுதா? அப்ப அன்னாசிப்பூவை இப்படி யூஸ் பண்ணுங்க.

தலைமுடி உதிர்வது என்பது இன்றைய காலத்தில் நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.

ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, தலைமுடியின் ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்பட்டு, உதிரத் தொடங்குகிறது.

இப்படி தலைமுடி உதிரும் போது, அதைத் தடுக்க உடனே முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த தலைமுடி அதிகம் உதிர்ந்து, முடியானது எலிவால் போன்று மாறிவிடும். அதோடு வழுக்கையும் விழுந்துவிடும். தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பல பொருட்கள் சமையலறையில் உள்ளன. அதில் ஒன்று தான் அன்னாசிப்பூ.

இந்த அன்னாசிப்பூவில் உள்ள மருத்துவ பண்புகள் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். இருப்பினும் அன்னாசிப்பூவை பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்த பின் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதில் உள்ள ஒருசில பண்புகள் அழற்சியை ஏற்படுத்திவிடும். சரி, தலைமுடியின் வளர்ச்சிக்கு அன்னாசிப்பூவை எப்படி பயன்படுத்துவது என்று கேட்கலாம். கீழே சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கானதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.

1. அன்னாசிப்பூ நீர்

* அன்னாசிப்பூ நீரை தயாரிக்க ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் 1-2 அன்னாசிப்பூக்களை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, பின் அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு தலைக்கு ஷாம்பு போட்டு அலசிய பின், இந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.

* இப்படி செய்யும் போது, அதில் உள்ள பண்புகள் ஸ்கால்ப்பிற்கு சத்துக்களை வழங்கி, முடியை வலுவடையச் செய்யும்.

2. அன்னாசிப்பூ மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க்

* இந்த மாஸ்க் செய்வதற்கு அன்னாசிப்பூவை அரைத்து பொடி செய்து, அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அதை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

3. அன்னாசிப்பூ மற்றும் விளக்கெண்ணெய் பேக்

* இதற்கு அன்னாசிப்பூவை அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின் அத்துடன் விளக்கெண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, அதை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

* பின்பு அதை இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைமுடியை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

4. அன்னாசிப்பூ மற்றும் ஹென்னா ஹேர் பேக்

* இந்த ஹேர் பேக்கிற்கு அன்னாசிப்பூவை பொடி செய்து, அத்துடன் ஹென்னா பவுடரை சேர்த்து, நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அதை தலைமுடியில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

5. அன்னாசிப்பூ மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்

* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு அன்னாசிப்பூ பொடியுடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை தலைமுடியில் தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

6. அன்னாசிப்பூ மற்றும் எலுமிச்சை சாறு

* இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் அன்னாசிப்பூ பொடியை எடுத்து, அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதை ஸ்கால்ப்பில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.

7. அன்னாசிப்பூ மற்றும் கற்றாழை ஜெல்

* இந்த ஹேர் பேக்கிற்கு அன்னாசிப்பூ பொடியை எடுத்து, கற்றாழை ஜெல்லை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அதை ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* அதன் பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.

8. அன்னாசிப்பூ மற்றும் முட்டை ஹேர் மாஸ்க்

* இந்த ஹேர் பேக்கிற்கு அன்னாசிப்பூ பொடியை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News