Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 29, 2024

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய எச்சரிக்கை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் போன்ற பேரிடர்களின்போது பாதிக்கப்படக்கூடிய மக்களை பள்ளிகளில் தங்க வைக்க வேண்டிய சூழல் இருப்பதால் பள்ளி நிர்வாகம், உரிமையாளர்கள், கேன்டீன் நிர்வாகம் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பள்ளி பாதுகாப்பு மற்றும் தூய்மை நடைமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் உள்ள மின் இணைப்புகளை சரிபார்க்கவும், வடிகால்களை சுத்தம் செய்தல் மற்றும் திறந்தவெளி வடிகால்களை மூடுதல், பள்ளங்களை நிரப்புதல் மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல் போன்ற பணிகளை முடுக்கிவிடுமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளின் மேற்கூரையில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவும், அவ்வாறு இருந்தால் உடனடியாக வெளியேற்றவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் பாழடைந்த கட்டிடங்களை முற்றிலுமாக தவிர்க்கவும், பேரிடர்களின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கட்டடங்களை பராமரிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) ஊழியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு (எஸ்எம்சி) உதவியுடன் பள்ளி தலைமையாசிரியர்கள் தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பள்ளி கட்டிடங்களின் மேற்கூரையை ஆய்வு செய்து பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் குழந்தைகள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதை பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். 

மழையின் போது பள்ளி வளாக சுவரை கண்காணிக்க வேண்டும். மோசமாக இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் அல்லது அந்த இடத்தை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். 

மழையின் போது பாதிக்கப்படும் வகுப்பறைகள்/கழிவறைகளை பூட்ட வேண்டும். மின் சுவிட்சுகளின் நிலையை சரிபார்க்க வேண்டும். 

மின்விசிறிகள், விளக்குகள் மற்றும் வெளியில் வயரிங் குறித்து பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத்தில் குடிநீர் மற்றும் மற்ற உபயோகங்களுக்கு தண்ணீர் தேவையை முறையாக உறுதிசெய்ய வேண்டும்.

வெள்ளத்தின் போது பள்ளிகள் பெரும்பாலும் நிவாரண முகாம்களாக செயல்படுவதால், அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News