Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 16, 2024

தமிழகத்தில் `TET' தேர்வு மதிப்பெண்களை குறைக்க வேண்டும்: அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை



ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் ஆந்திரா, ஒடிசாஉள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதைப் போல, தகுதித் தேர்வு தேர்ச்சிமதிப்பெண்களை இடஒதுக்கீடு வாரியாக குறைத்து அரசு அறிவிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய அரசின் இலவச கட்டாய

கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுக்கு இரண்டு முறை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் தேர்வை முறையாக நடத்துவது இல்லை. 2022-ல் நடத்த வேண்டிய டெட் தேர்வு, 2023 பிப்ரவரியில் நடந்தது. 2024-ம் ஆண்டுக்கான ஆசிரியர்தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் டெட் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதம் தேர்வுநடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அறிவித்தபடி டெட் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறது. ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தேர்வர்கள் கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஒருவர் ஆசிரியர் என்பதற்கான தகுதியை நிர்ணயிக்கும் தேர்வு மட்டுமே ஆகும். இந்தத் தேர்வுஆசிரியர் பணியைப் பெறுவதற்தான தேர்வு அல்ல.

தகுதியை நிர்ணயிக்கும் தேர்வு: தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்காக தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் இரண்டாவதாக ஒரு தனி போட்டித் தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறுகின்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. எனவே, ஆசிரியர் தகுதி தேர்வு என்பது தற்போது ஆசிரியர்களின் தகுதியை மட்டும் நிர்ணயிக்கும் தேர்வாக உள்ளது. அரசு பணி பெறும் தேர்வு அல்ல. தமிழ்நாட்டில் மட்டும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 2014-ம் ஆண்டு வெளிவந்த சிறப்பு அரசாணையின்படி இன்னும் 82 ஆகவே உள்ளது. தேர்வர்கள் நலன் கருதி 10 ஆண்டுகளாக எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது அரசு ஆசிரியர் பணி பெற இரண்டு வகை தேர்வுகள் எழுத வேண்டிய சூழல் உள்ளது.

கூடுதல் மனச்சுமை: இதர மாநிலங்களோடு ஒப்பிடும்போது, இதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்படாமல் இருப்பது, இரண்டு வகையான போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு கூடுதல் மனச்சுமை அளிப்பதாக உள்ளது. உயர்கல்வியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும்தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களைப் பின்பற்றி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை பொதுப் பிரிவினருக்கு 90 சதவீதமாகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 75 சதவீதமாகவும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 60 சதவீதமாகவும், மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் குறைத்து வழங்க வேண்டும். உதாரணமாக ஆந்திர மாநிலத்தில் ஓசி பிரிவு விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 60% அதாவது 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பு விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 50% அதாவது 75 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வர்கள் நலன் கருதி... எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40% அதாவது60 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆந்திராவைப் போல சத்தீஸ்கர், தெலங்கானா, பிஹார், ஒடிசா ஆகிய இதரமாநிலங்களும் இதே நடைமுறையைப் பின்பற்றுகின்றன. எனவே, தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தேர்வர்கள் நலன் கருதி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து அறிவித்து சமூக நீதியை காக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு தேர்வர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News