Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 22, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.10.24

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள்




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

அதிகாரம் : நட்பு

குறள் எண்: 787

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.

பொருள் : நண்பனை அழிவைத் தரும் தீமைகளிலிருந்து விலக்கி, நன்னெறியில் நடக்கச் செய்து,அவனுக்குத் துன்பம் வந்த போது அவனுடனிருந்து துன்பப்படுவதே நட்பு ஆகும்.            

பழமொழி :

கல்வியே நாட்டின் முதல் அரண்.  

  Education is the chief defence of a Nation.

இரண்டொழுக்க பண்புகள் :  

1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள். 

2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .

பொன்மொழி :

ஒரு போதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டென்றால், அது நாம் செய்யும் நற்செயலே.---மேட்டர்லிங்க்

பொது அறிவு : 

1. ஆண்டு முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி எது?

விடை:  பூமத்திய ரேகை மண்டலம்

2. அறுவைச் சிகிச்சையில் உடலின் உள்ளே உள்ள பாகங்களைத் தைப்பதற்குப் பயன்படுவது எது? 

விடை:  பட்டு நாண்

English words & meanings :

 Comb-சீப்பு,

 Scissors-கத்தரிக்கோல்

வேளாண்மையும் வாழ்வும் : 

செயற்கை அல்லது வேதியல் உரங்கள் உபயோகித்து செய்யப் படும் விவசாயம் அதிக மகசூல் தந்தாலும் இது அதிக அளவில் மண்ணையும் மனிதனையும் பாதிக்க ஆரம்பித்தது. இதன் விளைவாக இயற்கை உரம் கொண்டு செய்யப் படும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்ற குரல் எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது

அக்டோபர் 22

பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள் (International Stuttering Awareness DayISAD), அல்லது பன்னாட்டு திணறல் விழிப்புணர்வு நாள் (International Stammering Awareness Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 22 ஆம் நாள் கொண்டாடப்படும் ஓர் நிகழ்வாகும். இது முதன் முதலில் 1998 இல் ஐக்கிய இராச்சியம்அயர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதமானோர் திக்குவாய் அல்லது திணறுபவர்களாக உள்ளனர், இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் நோக்கமாக உள்ளது.

நீதிக்கதை

 பருவத்தே பயிர்செய் 


பழனிக்கு சொந்தமாக வயல் ஒன்று இருந்தது. மற்றவர்கள் எல்லாம் வயலில் உழுகின்ற நேரம் பழனி தன் வயலைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் சும்மாவேயிருந்தான்.

இதனைக் கவனித்த பழனியின் மனைவி வயலில் ஏர்கலப்பை பூட்டி உழும்படி கூறினாள். பழனி அதனை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விட்டான்.

மற்ற விவசாயிகள் எல்லாம் வயலில் நீர் பாய்ச்சி விவசாய வேலையை ஆரம்பித்தார்கள். அதனைக் கண்ட பழனி நமது வயலில் பின்னர் விவசாயம் செய்து கொள்ளலாம் என்று சும்மாவே இருந்து விட்டான்.

அதனைக் கண்டு பழனியின் மனைவிக்கு ஆத்திரமாக வந்தது. பழனியை விவசாயம் செய்யும்படி வற்புறுத்தினாள்.

சோம்பேறியான பழனி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மாவே இருந்துவிட்டான். பழனியின் வீட்டிலிருந்த அரிசி மூட்டையில் உள்ள அரிசியெல்லாம் காலியாகத் தொடங்க, அவன் சாப்பாட்டிற்கு அரிசி வாங்க பணம் இல்லாமல் திண்டாடினான்.

அறுவடை காலம் நெருங்கியதும் மற்ற விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து, நெற்குவியல்களை மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றார்கள்.

அதனைப் பார்த்து பழனியால் பொறாமைப்படத்தான் முடிந்தது. குறித்த காலத்தில் விவசாயம் செய்து முடிக்காததால் தன் குடும்பம் இன்று வறுமையில் வாடுகிறதே என்று கவலையடைந்தான்.

இனிமேல் எந்த வேலையையும் காலம் பார்த்துச் செய்ய வேண்டுமென்று தன்னைத் திருத்திக் கொண்டான்.

நீதி:

பருவம் பார்த்து பயிர் செய்வதுபோல்,எந்தச் செயலையும் காலம் பார்த்து உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

22.10.2024

* விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்.

* டெல்டா பாசனத்திற்கு மேட்டூரில் இருந்து 2500 கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.

* திருவள்ளூரில் இரு செப்பேடுகள் கண்டுபிடிப்பு. மப்பேட்டில் உள்ள சிங்கீஸ்வரர் கோயிலில் விஜயநகர பேரரசு காலத்திலான இரு செப்பேடுகள் கண்டுபிடிப்பு.

* இந்தியாவுக்கு ஐ.நா., சபையில் நிரந்தர இடம்... பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன்  வலியுறுத்தல்.

* 2024 ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது.இந்த போட்டியில், நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Today's Headlines

* Tamil Nadu Pollution Control Board appeals to the public to celebrate an accident, sound and pollution free Diwali.

* An additional 2500 cubic feet of water has been released from Mettur for delta irrigation.

* Discovery of two coppers in Tiruvallur. Two Vijayanagara Empire period tombstones were discovered at Singheeswarar temple in Mappet.

* Permanent seat for India in the UN...Emphasis by former British Prime Minister David Cameron.

* New Zealand team and South Africa team clashed in the final of the 2024 Women's T20 World Cup cricket series. New Zealand won the match by 32 runs.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News