Join THAMIZHKADAL WhatsApp Groups
காற்பந்தான்ட வீரர் பீலே |
கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு.
The roots of education is bitter, but the fruits are sweet.
இரண்டொழுக்க பண்புகள் :
1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள்.
2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .
பொன்மொழி :
"சரித்திரம் ஒரு முறை உன் பேரைச் சொல்ல வேண்டும் என்றால் நீ பல முறை என்னிடம் வர வேண்டும். இப்படிக்கு "" முயற்சி""."
பொது அறிவு :
1. முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்.
2. பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
கேரளா
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
கரிம விவசாய இயக்கம் 1930 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் துவங்கியது. 1940 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் செயற்கை உரங்கள் மீது விவசாயம் அதிக அளவில் சார்ந்திருந்தமைக்கு ஓர் எதிர்ப் போக்காக இது காணப்பட்டது.
அக்டோபர் 23
நீதிக்கதை
நன்றி மறவேல்
ஆத்தியூரில் சுப்பையா என்பவர் வாழ்ந்து வந்தார். சுப்பையா கோடீஸ்வரர். அதே நேரத்தில் ஏழைகளுக்கு தான தர்மம் செய்வதில் தலை சிறந்தவர்.
சுப்பையாவின் தானதர்மத்தை கேள்வியுற்று ஏராளமான மக்கள் அவரிடமிருந்து உதவி பெற்றுச் சென்றார்கள். சுப்பையாவும் தன்னைத்தேடி வருகின்றவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் தான தர்மங்களை செய்து வரலானார்.
நாட்கள் செல்ல செல்ல சுப்பையாவின் சொத்துக்கள் எல்லாம் தர்மங்கள் செய்தே குறைய ஆரம்பித்தன. சுப்பையாவோ அதனைப் பற்றிக் கவலைப்படாமல் தர்மங்கள் செய்வதிலேயே கவனமாக இருந்தார்.
சில நாட்களில் சுப்பையாவின் வீடு, நிலம் எல்லாவற்றையும் கூட மற்றவர்களுக்கே தானம் செய்துவிட்டார்.
இவரிடமிருந்து உதவி பெற்றவர்களே சுப்பையாவின் பரிதாப நிலமையைக் கண்டும் கூட எந்தவித உதவியும் செய்ய முன் வராமல் சென்று விட்டார்கள். தங்குவதற்கு இடம் இல்லாமல் ஓர் சத்திரத்தின் அருகே வந்தார்.
அவர் கண்கள் இருண்டு, காதுகள் அடைத்து பசி மயக்கத்தில் மிகவும் தள்ளாடினார். அந்த நேரத்தில் சத்திரத்தில் ஒரு சிலர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
சுப்பையாவின் நிலமையைக் கண்ட அவர்கள் ஏதும் தெரியாதது போல், சாப்பிடுவதிலேயே கவனமாக இருந்தார்கள். சுப்பையா மெல்ல மெல்ல சத்திரத்தின் திண்ணையோரம் நெருங்கினார். அந்த நேரம் சமையல்காரர் வேகமாக ஓடிவந்து சுப்பையாவை அடித்து விரட்டினார்.
அந்த நேரம் சத்திரத்துக் காவலாளியானவர் சுப்பையாவைப் பார்த்துவிட்டார்.
அவர் உடனே பதறியபடி வேகமாக ஓடிவந்து சுப்பையாவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார். பின்னர் சமையல்காரரைப் பார்த்து “ஐயா! நன்றி கெட்டவர்களே! இந்த சத்திரம் இவர் பணத்தால் தான் கட்டப்பட்டது.
நீங்கள் கூட இவரிடம் எத்தனையோ முறை உதவி பெற்றுச் சென்றிருக்கின்றீர்கள்! உங்களைப் போன்றவர்களுக்கு உதவி செய்தே இவர் இந்த நிலமைக்கு ஆளாகிவிட்டார்.
ஆனால் நீங்களோ இவர் செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் நன்றியை மறந்து இவரை அடித்து விரட்டுகின்றீர்கள் என்று கூறியபடி கோபத்துடன் சுப்பையாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை நல்லபடியாக உபசரித்தார் சத்திரத்துக் காவலாளி.
சுப்பையாவின் பசியெல்லாம் அடங்கிய பின்னர் சத்திரத்து காவலாளி “ஐயா! நானும் தங்களிடம் உதவி பெற்றள்ளேன். நீங்கள் கோயிலுக்கு வருகின்ற நேரமெல்லாம் உங்களை கவனித்திருக்கின்றேன்.
இன்றுதான் உங்களோடு பேசுகின்ற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.உங்களோடு பேசுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்று கூறினார். அதனைக்கேட்ட சுப்பையா சிரித்தபடியே அந்தக் காவலாளியை நோக்கி,
“அப்பா என் பசியைப் போக்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.
நீதி:ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்காமல் வாழ வேண்டும். நன்றி உணர்ச்சியோடு வாழ்ந்தால் நன்மையே நடக்கும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment