Join THAMIZHKADAL WhatsApp Groups
|
தீய பண்பைத் திருத்தி நல்ல பண்பை பொலிவுறச் செய்யும் கல்வி.
Education polishes good nature and corrects bad ones.
இரண்டொழுக்க பண்புகள் :
1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள்.
2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .
பொன்மொழி :
" கோழையும் முட்டாளுமே ' இது என் விதி ' என்பர், ஆற்றல் மிக்கவரோ 'என் விதியை நானே வகுப்பேன் ' என்பர்".----விவேகானந்தர்.
பொது அறிவு :
1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
விடை: ஞானபீட விருது
2.ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
விடை: சத்யஜித்ரே
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
18-வது நூற்றாண்டில் செயற்கை உரங்கள் உருவாக்கப்பட்டன. முதலில் யூரியாவும் அதன் பிறகு அம்மோனியாவிலிருந்து கிடைக்கப் பெற்ற மற்ற உரங்களும், ஹேபர்-பாஸ்ச் முறையைப் பயன்படுத்தி மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்யப்பட்டன.
அக்டோபர் 24
- உலக இளம்பிள்ளை வாத நாள்
இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.
இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது.
- ஐக்கிய நாடுகள் நாள்
1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.
1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.
ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.
நீதிக்கதை
புத்திசாலி முயல்
ஒரு காட்டின் நடுவுல தீவு மாதிரி ஒரு இடம் இருந்தது. இந்த தீவுக்கு போவதற்கு ஒரு குளத்தை கடந்து தான் போகணும்.
அந்த தீவில் சுவையான பழங்களும், காய்கறிகளும் இருந்தது. அந்த காட்டில் இருந்த எல்லா விலங்குகளுக்கும் அங்க இருக்கிற பழங்களை சாப்பிட ஆசை. ஆனால்! யாருக்குமே அந்த இடத்திற்கு போக தைரியம் இல்ல. ஏன் என்றால் அந்த குளத்தில் நிறைய முதலைகள் இருந்தது. ஒரு நாள் அதே காட்டில் வாழ்ந்து வந்த முயல் தண்ணி குடிக்க குளத்திற்கு போனது. அப்போது அந்த தீவை பார்த்து யோசித்தது.
“எனக்கு அந்த தீவுக்குப் போய் அங்கு இருக்கும் எல்லா பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட ஆசை ஆனால் இந்த முதலைகளிடம் இருந்து தப்பிச்சு எப்படி அங்க போகிறது” என்று ரொம்ப யோசித்தது முயல்.
முயலுக்கு ஒரு ஐடியா தோன்றியது. அடுத்த நாள் காலையில் முயல் குளத்திற்கு வந்து எல்லா முதலைகளையும் சத்தம் போட்டுக் கூப்பிட்டது. முதலைகள் கோபத்துடன் முயல் அருகில் வந்தன.
“உங்ககிட்ட ஒன்று சொல்லனும். என்ன எதுவும் செய்ய மாட்டீங்கனு எனக்கு சத்தியம் பண்ணுங்க”
என்று முயல் சொன்னது.அதற்கு
“கவலைப்படாமல் சொல்லு நாங்கள் உன்னை எதுவுமே பண்ண மாட்டோம்” என்று ஒரு முதலை சொன்னது.
“இந்த காட்டு ராஜா இங்கே இருக்கும் எல்லா விலங்குகளுக்கும் ஒரு பெரிய விருது வைக்கணும்னு நினைக்கிறார். அதுக்கு காட்டில் இருக்கிற விலங்குகளோட ஒரு பட்டியல் ரெடி பண்ணுகிறார். நீங்க சம்மதித்தால் நீங்க எத்தனை பேர் இருக்கிறீர்கள் என எண்ண சொன்னார் ” என முயல் சொன்னது.
எல்லா முதலைகளும்
அவர்களுக்குள் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டது. அதற்கு பிறகு ஒரு முதலை “சரி நீ எங்களை எப்படி எண்ணுவாய்”
என்று கேட்டது. “எல்லாரும் ஒருவர் பின் ஒருவராக வரிசையில நில்லுங்கள்.நான் உங்க முதுகுமேல ஏறி குதித்து, ரொம்ப ஈசியாக எண்ணி விடுவேன்” என்று சொன்னது முயல்.
முயல் சொன்னபடியே எல்லா முதலைகளும் செய்தது. அந்த வரிசை குளத்தோட கரையிலிருந்து தீவோட கரை வரைக்கும் இருந்துச்சு. முயல் உடனே முதலைகளின் முதுகின்மேல் குதித்து, குதித்து வெற்றிகரமாக தீவுக்குப் போய் சேர்ந்தது.
அந்த நாள் முழுக்க முயல் எல்லா பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு நன்றாக ஒய்வு எடுத்து சாயங்காலம் தீவோட கரைக்கு வந்தது. காலைல போன முயல் ஏன் இன்னும் திரும்பி வரலனு தீவின் கரையிலயே காத்திருந்த முதலைகள் முயலைப் பார்த்ததும் “இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு
இருந்தாய்” என்று கேட்டன.
“அதிக எண்ணிக்கையில் இருக்கும் உங்களை எண்ணுவதில் கொஞ்சம் பிழை ஏற்பட்டு விட்டது. நீங்கள் எவ்வளவு பேர் என எண்ணுவது அவ்வளவு சுலபம் இல்லை. இன்னும் ஒரு முறை காலையில இருந்தது போல அந்த வரிசையில் நில்லுங்க இந்த முறை நான் கண்டிப்பா சரியாக எண்ணிடுவேன்” என்று முயல் சொன்னது.
எல்லா முதலைகளும் முயல் சொன்னதை நம்பி மறுபடியும் வரிசையில் நின்றது. உடனே முயல் முதலைகளின் முதுகில் குதித்து குளக்கரைக்கு புத்திசாலித்தனமாக முதலைகளிடமிருந்து தப்பிச் சென்றது.
நீதி :நாமும் புத்திசாலித்தனத்துடன் யோசித்து செயல்பட்டால் நாம் நினைத்ததை அடையலாம்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment