முக்கிய செய்திகள்

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 28, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2024

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பில் கேட்ஸ்




திருக்குறள்: 

"பால்:அறத்துப்பால்

அதிகாரம் : நடுவுநிலைமை

குறள் எண்: 114

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்  படும் .

பொருள் : ஒருவர் நேர்மை உடையவரா, இல்லாதவரா என்பது அவரவர் நடத்தையால் தெரியப்படும். நேர்மையானவர்களுக்கு பண்புடைய  மக்கள் பிறப்பதும்,நேர்மை தவறுவோர்க்கு நல்ல மக்கள் அமையாமல் போவது உலகியல் மரபு."

பழமொழி :

He that can stay obtains.

பொறுத்தார் பூமி ஆள்வார்.

இரண்டொழுக்க பண்புகள் :  

 ‌ *திடீரென  மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். 

 *மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.

பொன்மொழி :

கடந்து போன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவிற்கு இந்த உலகில் யாரும் பணக்காரர்கள் கிடையாது. ---ஆஸ்கர் வைல்ட்

பொது அறிவு : 

1. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?

விடை: குதிரை

2.மாநிலத்தின் கீழுள்ள நீதிமன்றங்களை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றவை எது?

விடை: உயர்நீதிமன்றம்

English words & meanings :

 Fence- வேலி                                 

Fertilizer. -  உரம்

வேளாண்மையும் வாழ்வும் : 

சர் ஆல்பர்ட் ஹோவர்ட என்பவர்தாம் கரிம வேளாண்மையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

அக்டோபர் 28

வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

நீதிக்கதை

 பொம்மை 


ஆறு வயது சிறுவன் ஒருவன் தனது நான்கு வயது தங்கையை அழைத்துக் கொண்டு  கடைத்தெரு வழியாக சென்றான்.

 ஒரு கடையிலிருந்து பொம்மையை பார்த்து, தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை உனக்கு வேண்டும்" என்று கேட்டான்.


அவள் விரும்பிய பொம்மையை வாங்கி கையில் கொடுத்துவிட்டு பெரிய மனித தோரணையுடன் கடைக்காரரைப் பார்த்து, "அந்த பொம்மை என்ன விலை? என்றான்.


 அதற்கு அந்த கடையின் முதலாளி சிரித்துக் கொண்டே,"உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது? என்று கேட்டார்.


அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேகரித்து வைத்திருந்த சிற்பிகளை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்தான். இது போதுமா? என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கவலையான முகத்தை பார்த்துக் கொண்டே," எனக்கு நான்கு சிப்பிகள் போதும் மீதியை நீயே எடுத்துக்கொள்" என்றார்.


சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி இருந்த சிற்பிகளையும் தன் தங்கையுடன் அந்த 

பொம்மையையும் எடுத்துக் கொண்டு சென்றான். 


இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்தக் கடையின் வேலையாள் தனது முதலாளியிடம், " ஐயா ஒன்றுக்கு உதவாத சிப்பிகளை எடுத்துக்கொண்டு விலையுயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே ஐயா" என்று கேட்டார்.


அதற்கு  முதலாளி, "அந்த சிறுவனுக்கு  பணம்  கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்  என்பது புரியாத வயது  அவனைப் பொறுத்தவரை அவனிடம் உள்ள சிப்பிகளே உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவனுடைய மனதில் பணம் தான் உயர்ந்தது என்ற எண்ணம் வந்துவிடும்.

அதனை நான் தடுத்து விட்டேன். மேலும், தனது தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர இயலும் என்ற தன்னம்பிக்கையும் அவனது மனதில் விதைத்து விட்டேன்"என்றார்.


மேலும்,"என்றாவது ஒருநாள் அவன் பெரியவனாகி இதை நினைத்துப் பார்க்கும் பொழுது இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற எண்ணம் அவன் மனதில் எழும் ஆகையால் அவனும் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வான்" என்றும் கூறினார்.


நீதி: இந்த உலகம் அன்பாலும், மனிதத் தன்மையாலும் கட்டமைக்கப்பட வேண்டும்.

இன்றைய செய்திகள்

28.10.2024

* அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 7,979 பணியிடங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிச.31-ம் தேதி வரை ஊதியம் வழங்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

* காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து  33 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.

* பிரபல இசைக் கச்சேரிகளின் டிக்கெட் விற்பனையில் முறைகேடு: 5 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை.

* சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா.

* லா லிகா கால்பந்து: இன்றைய ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி பார்சிலோனா அபார வெற்றி.

* ஜப்பான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின்.

Today's Headlines

* The school education department has given permission to pay salaries to the graduate teachers working in 7,979 posts created temporarily in government schools till 31st December.

* Due to heavy rains in the Cauvery catchment areas, the flow of water to Mettur dam has increased to 33 thousand cubic feet.

 * Malpractice in ticket sales of popular music concerts: Enforcement probes in 5 states

 * America sent back Indians who stayed illegally.

* La Liga Football: Barcelona beat Real Madrid in today's match.

 * Japan Open Tennis: American player Sophia Kenin advanced to finals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News