Friday, October 25, 2024

அமைச்சுப் பணியாளர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் நேரடியாக 2% பதவி உயர்வை அடைய முடியாது


அமைச்சுப் பணியாளர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் நேரடியாக 2% பதவி உயர்வை அடைய முடியாது ;-

அமைச்சுப் பணியாளர்களின் இரண்டு சதவீத பதவி உயர்வு வழக்கில் இனிமேல் எந்த ஒரு அமைச்சுப் பணியாளரும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டில் தேர்ச்சி பெற்றிருந்தாலும்

நேரடியாக BT அல்லது PG ஆக பதவி உயர்வு அடைய முடியாது .

மாறாக அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டில் தேர்ச்சி பெற்ற பிறகு நியமன தேர்விலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க முடியும் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும் அதற்கான திருத்தங்களை விதிகளில் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது .

இது சார்ந்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்பது இதன் மூலம் தெளிவாக புலனாகிறது

Court Order - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News