டியாகோ மாரடோனா |
Do good to those who harm you
பகைவனை நேசித்துப்பார்
இரண்டொழுக்க பண்புகள் :
*திடீரென மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
*மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.
பொன்மொழி :
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு , வேடிக்கை பார்த்தவர்க்கும்,விமர்சனம் செய்பவர்க்கும் ஒரு வரி கூட கிடையாது வாழ்க்கை புத்தகத்தில்.......,
பொது அறிவு :
1. சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டுப்பட்டுள்ளது?
விடை: தென்பெண்ணை
2. இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன கால்வாய் எது?
விடை: சாரதா கால்வாய்
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
பொது மக்களிடையே இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது. நுகர்வோர் இதற்காக கூடுதல் விலை கொடுக்க முன்வந்தனர்.
அக்டோபர் 30
மாரடோனா அவர்களின் பிறந்தநாள்
1960 அக்டோபர் 30 ஆம் தேதி அர்ஜென்டினாவின் Lanús பகுதியில் பிறந்தவர் மாரடோனா. அவரது குடும்பம் எளிய பின்னணியை கொண்டது. அவருக்கு நான்கு தங்கைகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மாரடோனா மூன்று வயது சிறுவனாக இருந்த போது கால்பந்து ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் கால்பந்தாட்டத்தின் மீதான காதலை பின்னாளில் வளர்த்துள்ளது. வீட்டில் வறுமை வாட்டிய போதும் கால்பந்தை விடாமல் விரட்டியுள்ளார் மரடோனா. 15 வயது 355 நாளில் தொழில்முறை கால்பந்தாட்ட விளையாட்டில் முதல்முறையாக விளையாடி உள்ளார் மாரடோனா. அதற்கடுத்த சில மாதங்களில் அர்ஜென்டினா அணிக்காக விளையாட ஆரம்பித்தார் மாரடோனா. அதன்பிறகு நடந்த அனைத்தும் வரலாறு. அர்ஜென்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடிய மாரடோனா 34 கோல்களை அடித்துள்ளார். நூற்றாண்டின் சிறந்த கோல் என போற்றப்படும் கோலை இங்கிலாந்துக்கு எதிராக அடித்திருந்தார் மாரடோனா. அதே ஆட்டத்தில் தான் சர்ச்சையான HAND OF GOD என்ற கோலும் அடிக்கப்பட்டது.
நீதிக்கதை
அச்சம்
அக்பரிடம் ஒரு அறிவாளி, "எனது வேலைக்காரன் ஒருவன் பெரும்தீனிக்காரன். அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுங்கள். ஆனால் அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. மாத இறுதியில் அவனுடைய உடலில் ஒரு கிலோ எடை கூட ஏறக்கூடாது" என்று சவால் விட்டார்.
அக்பரின் சார்பாக பீர்பால் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். அதேபோல் அந்த வேலையாளுக்கு ஒரு மாதம் சத்தான உணவுகள் வழங்கப்பட்டது. மாத இறுதியில் அவருடைய எடையை பார்த்தபோது, அவருடைய எடை கூடவே இல்லை. அக்பருக்கு ஆச்சரியம் என்ன நடந்தது என்று விசாரித்தார்.
பீர்பால், "அரசரே அவருக்கு மூன்று வேளையும் சத்தான உணவுகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவருடைய இரவு படுக்கை மட்டும் சிங்கத்தின் குகையின் அருகே அமைக்கப்பட்டது.
அதனுடைய கதவின் பூட்டு சரியாக இல்லை என்றும் கூறினேன். அச்சத்தின் காரணமாகவே அவருடைய உடலில் ஊட்டச்சத்து ஒட்டவில்லை.
நீதி: அச்சமின்மையே ஆரோக்கியம்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment