Join THAMIZHKADAL WhatsApp Groups
நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.74,527 கோடிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை செயலர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் எஸ்.மதுமதி நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் நடப்பு நிதி ஆண்டில் தமிழகம் முழுவதும் 440 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.74,527.47 கோடி செலவில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிதியில் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவது, மாணவ, மாணவிகளுக்கு கழிப்பறை வசதி, ஆய்வக வசதி, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் கட்டுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment