Join THAMIZHKADAL WhatsApp Groups
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவினை முன்னிட்டு நவ. 7 ஆம் தேதி விடுமுறை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற நவ. 2-ஆம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ. 7-ஆம் தேதியும், திருக்கல்யாணம் நவ. 8-ஆம் தேதி பெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்காக திருக்கோயில் சாா்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சூரசம்ஹாரம் நடைபெறும் வரும் நவ. 7-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு மேற்குறிப்பிட்டுள்ள நாளில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment