Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மே, ஜூன் மாதங்களில் நடைபெறும். சில தனியார் பள்ளிகளில் விஜயதசமி தினத்தை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இது பல பள்ளிகளிலும் விரிவடைந்துள்ள நிலையில் அரசு பள்ளிகளிலும் விஜயதசமிக்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார இறுதி நாள்கள் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர் விடுமுறை காரணமாக மாணவர்கள், பெற்றோர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், சுற்றுலா செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த சூழலில் அக்டோபர் 12ஆம் தேதி சனிக் கிழமை விஜயதசமி தினம் அன்று அரசு பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுக்கு விடுமுறை என்றாலும், அன்றைய தினம் புதிய மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க விரும்பினால் அன்றைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment