வாழைப்பழம் நம் உடலுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப் பாதையில் ஏற்படும் மலச்சிக்கல், குடல் புண், குடல் அரிப்பு போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்ய பச்சை வாழைப்பழத்தை உட்கொள்ளலாம்.
குடல் புண் எனப்படும் அல்சரை சரிசெய்ய தினமும் மதிய உணவுக்கு பிறகு கட்டாயம் ஒரு பச்சை வாழைப்பழத்தை எடுத்து கொள்ளவும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாழைப்பழத்தை விரும்பி சாப்பிவார்கள். ஆனால் நீங்கள் வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் தோலை தூக்கி எறிந்தால், அடுத்த முறை அதைச் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். ஆம், வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் தோல்களும் உங்களின் பல பிரச்சனைகளை நீக்க உதவும். வாழைப்பழத்தோலில் வைட்டமின் பி-6, பி-12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. இவை தோல் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குவதில் நன்மை பயக்கும். எப்படி என்பதை அறியலாம்.
மருக்களை நீக்கும்
மருக்கள் பிரச்சனையில் இருந்து விடுபட வாழைப்பழத்தோல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், வாழைப்பழத்தோலில் உள்ள சில சிறப்பு கூறுகள் மருக்களை போக்க உதவும் என்று ஒரு ஆராய்ச்சி நம்புகிறது. இதற்கு வாழைப்பழத் தோலின் ஒரு துண்டை மருக்கள் உள்ள இடத்தில் இரவு முழுவதும் வைக்கவும். இந்த செயல்முறையை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், மருக்கள் படிப்படியாக மறைந்துவிடும்.
முகப்பருவிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வாழைப்பழத்தில் காணப்படுகின்றன. இந்த பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிப்பதன் மூலம் சருமத்தை சரிசெய்ய உதவும். இதற்கு வாழைப்பழத்தோலை அரைத்து அதன் ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவலாம் அல்லது தோலை நேரடியாக பாதிக்கப்பட்ட சருமத்தில் தேய்த்து பயன்படுத்தலாம். இது முகப்பொலிவை அதிகரிக்கவும் உதவும்.
சுருக்கங்களை குறைக்கும்
வாழைப்பழத்தோலில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் (பாக்டீரியாவை அழிக்கும்) மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் (வீக்கத்தைக் குறைக்கவும், சருமத்தை சரிசெய்யவும் உதவும்) பண்புகள் பல தோல் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துவதிலும், சுருக்கங்களை நீக்குவதிலும் நன்மை பயக்கும். இதனால் இளம் பெண்கள் வாழைப்பழத்தோலை அடிக்கடி பயன்படுத்துவது நல்லது.
புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க உதவும்
நிபுணர்களின் கூற்றுப்படி, வாழைப்பழத் தோலில் பீனாலிக் கலவைகள் அதிக அளவில் உள்ளன. பீனாலிக் கலவைகள் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் உதவியாக இருக்கும் என்றும் ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. அதனால்தான் வாழைப்பழ ஃபேஸ் பேக்கை முகத்தில் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்வீச்சைப் பாதுகாக்க முடியும் என்று நம்பலாம்.
பற்களை பளபளப்பாக்கும்
உங்கள் பற்கள் மஞ்சள் கறை படிந்திருக்கிறதா.. இதனால் வெளியில் செல்லும் போது எதிரில் இருப்பவர்களுடன் பேசுவதற்கே தயக்கமாக இருக்கிறதா. இனி கவலை வேண்டாம். வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தி அவற்றை முத்துக்கள் போல் பளபளக்கச் செய்யலாம். வாழைப்பழத் தோலில் நல்ல அளவு பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு உள்ளது. இவை பற்களில் உறிஞ்சப்பட்டு அவற்றை வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவும். இந்த பரிகாரத்தை செய்ய வாழைப்பழத்தோலை எடுத்து சிறிது நேரம் பற்களில் தேய்க்கவும்.
No comments:
Post a Comment