Join THAMIZHKADAL WhatsApp Groups
கெட்ட கொழுப்பு உடலில் அதிகளவு தேங்கினால் இதய நோய், இரத்த அழுத்தம், பக்கவாதம்,உடல் பருமன்,சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும். எனவே இந்த கெட்ட கொழுப்பை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)வெந்தயம் ஒரு ஸ்பூன்
2)தண்ணீர் ஒரு கப்
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்கவிடுங்கள்.
இந்த வெந்தய நீரை ஒரு இரவு முழுவதும் ஊறவிட்டு மறுநாள் காலையில் வடித்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இந்த வெந்தய நீரை குடித்தால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
1)சீரகம் ஒரு ஸ்பூன்
2)தண்ணீர் ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் குடிக்க வேண்டும்.இப்படி தினமும் காலையில் குடித்து வந்தால் சில வாரங்களிலேயே உடலில் உள்ளார் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் பிட்டாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கும்.
1)பூண்டு ஒரு பல்
2)வெதுவெதுப்பான நீர் ஒரு கிளாஸ்
ஒரு பல் வெள்ளை பூண்டை தோல் உரித்துவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இந்த பூண்டு துண்டுகளை வெதுவெதுப்பான நீரில் போட்டு குடித்தால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
1)கறிவேப்பிலை ஒரு கொத்து
2)தண்ணீர் ஒரு கிளாஸ்
உடலில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய கறிவேப்பிலை நீர் பருகலாம்.அதற்கு முதலில் ஒரு கிளாஸில் தண்ணீர் நிரப்பிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கறிவேப்பிலையை அதில் போட்டு ஒரு இரவு ஊறவிட வேண்டும்.
இந்த கறிவேப்பிலை நீரை காலையில் எழுந்ததும் குடித்தால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
No comments:
Post a Comment