Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் தற்போது காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் பள்ளிகள் கடந்த திங்கட்கிழமை திறந்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை வந்துள்ளது.
இந்நிலையில் 2024- 25 ஆம் ஆண்டு திருத்திய நாள்காட்டியில் அரையாண்டு தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விடுமுறை குறித்த தகவல்கள் வந்துள்ளது.
அதன்படி டிசம்பர் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் ஜனவரி மாதம் 6-ம் தேதி 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment