Thursday, October 3, 2024

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!!


இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாட்களுக்கு நாட்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது, சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் உணவு முறைகள் பெரிதும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவது வழக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு முறைகளில் இவற்றை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்…

வாழைத்தண்டு வாழை பிஞ்சு வாழைப்பூ வெண்டைக்காய் முட்டைக்கோஸ் புடலங்காய் பாகற்காய் அவரை பிஞ்சு சாம்பல் பூசணி சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோய்களுக்கு மிகவும் நல்லது அதேபோல் அரைகீரை கருவேப்பில்லை புதினா சிறுகீரை முசுமுசுக்கை வல்லாரைக் கீரை பொன்னாங்கண்ணி கீரை முருங்கைக்கீரை மணத்தக்காளி கீரை துத்தி கீரை ஆகிய கீரை வகைகள் ஏதேனும் ஒன்றை பொறியியலாக தினம் உட்கொள்வது மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது அதேபோல் பல வகைகளில் நாவல் பழம் நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு மட்டுமே சாப்பிட வேண்டும் மறைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம் பேரிச்சம்பழம் கொய்யா பப்பாளி ஆப்பிள் விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் ஏதோ ஒரு பழத்தின் வகையை மட்டுமே ஒரு நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்…!!

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News