Friday, October 4, 2024

ஆசிரியர் பயிற்றுனர்கள் சிஇஓ அலுவலகத்தில் மனு

நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், நேற்று இரவு நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், கணக்காளர்கள், தணிக்கை மேலாளர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் ஆகிய அனைவருக்கும் செப்டம்பர் மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. இந்த ஊதியத்தை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு போர்க்கால அடிப்படையில் முதலமைச்சரின் சிறப்பு நிதியில் இருந்து ₹25 கோடி நிதி ஒதுக்கவேண்டும். மேலும், மத்திய அரசு நடப்பு ஆண்டுக்கான முதல் தவணையாக வழங்க வேண்டிய ₹573 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். நிதிச்சுமையை குறைக்க 1,500 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News