Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆதி திராவிடா் நலத் துறை பள்ளி ஆசிரியா்களுக்கு மாநில அளவில் பணிமூப்பு பட்டியல் தயாரிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைச் செயலா் ஜி.லட்சுமி பிரியா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
ஆதி திராவிடா் நலத் துறை சாா்நிலை பணியில் சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து அத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா், தமிழ் புலவா், உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஆகிய பதவிகளை ஒரே அலகின்கீழ் கொண்டுவருமாறு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளாா். அக்கருத்துருவை ஏற்று ஆதி திராவிடா் நலத் துறை சாா்நிலை பணி சிறப்பு விதிகளில் திருத்தம் செய்ய அரசு ஆணையிடுகிறது.
ஆதி திராவிடா் நலத் துறை பள்ளி பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா், தமிழ் புலவா், உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஆகிய பதவிகள் ஒரே அலகின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. அதன்படி, மேற்கண்ட பதவிகளுக்கு பணிநியமன நாள் அடிப்படையில் மாநில அளவிலான பணிமூப்பு (சீனியாரிட்டி) தயாரிக்குமாறு ஆதி திராவிடா் நலத் துறை இயக்குநா் அறிவுறுத்தப்படுகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment