Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 2, 2024

வீட்டில் இருந்தபடி சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்!!


மத்திய மற்றும் மாநில அரசின் சலுகைகள் பெற,கல்வி நிலையத்தில் சேர சாதி சான்றிதழ் முக்கியமான ஆவணமாக திகழ்கிறது.இந்த சாதி சான்றிதழ் வருவாய்த் துறையால் பதினைந்து நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சாதி சான்றிதழை பெற ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

சாதி சான்றிதழ் பெற இருக்க வேண்டிய தகுதி:

1)இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

2)வசிப்பிடம் தமிழக்தில் இருக்க வேண்டும்.

3)மூன்று வயது நிரம்பி இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:

*பாஸ்போர்ட் சைஸ் புகைப்படும்
*ஆதார் அட்டை.
*ரேசன் அட்டை
*விண்ணப்பதாரரின் தந்தை அல்லது தாயின் சாதிச் சான்றிதழ்

முதலில் https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.பிறகு அதில் உள்ள Citizen Login என்பதை கிளிக் செய்து உள் நுழைய வேண்டும்.

பிறகு பதிவு செய்யப்பட்ட Username and Password உள்ளீட்டு கேப்ட்சா குறியீடு என்டர் செய்து Login என்பதை கிளிக் செய்ய வேண்டும்.பிறகு DEPARTMENT WISE - Revenue Department - REV-101 Community certificate என்பதை கிளிக் செய்து செலக்ட் செய்ய வேண்டும்.

அதன் பிறகு Process என்பதை கிளிக் செய்து Register CAN என்பதை தேர்வு செய்ய வேண்டும்.பிறகு கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது ஆதார் நம்பர் எண்ணை என்டர் செய்து Search என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

பிறகு உங்களுடைய விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்தவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.அதன் பிறகு Generate OTP என்பதை கிளிக் செய்து OTP எண்ணை உள்ளிட்டு Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.பிறகு Requested Caste என்பதை தேர்வு செய்து
Whether any of the Applicants family members possess permanent online certificate issued by competent Revenue Authority NO என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு முகவரி சான்று,அப்பா அல்லது அம்மாவின் சாதிச்சான்று,ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை ஸ்கேன் செய்து Upload) செய்ய வேண்டும்.பின்னர் ஆன்லைனில் ரூ.60 கட்டணம் செலுத்தி
ஒப்புகை சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

அடுத்து https://tnedistrict.tn.gov.in இணையதள பக்கத்தில் நுழையும்.அதில் ஒப்புகை சீட்டு சான்றிதழ் எண்ணை உள்ளிட்டு தேடுக என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.10 நாட்கள் கழித்து உங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைத்துவிடும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News