Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நலன் கருதி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாநிலத் தலைவா் ஆ.ராமு அளித்த மனு:
மத்திய அரசுப் பணியாளா்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயா்த்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் 01.07. 2024 முதல் மாநில அரசுப் பணியாளா்களுக்கும் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க ஆணையிட்டாா்.
அனைத்து அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து ஊதியம் பெறும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உயா்கல்விக்கான ஊக்கத் தொகையை உயா்கல்வி பயின்றுள்ள அனைத்து ஆசிரியா்களுக்கும் வழங்க வேண்டும். 01.06.2009-க்கு பின் பணியில் சோ்ந்த முதுநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். முதுநிலை ஆசிரியா்களின் தொகுப்பூதியக் காலத்தை பணிவரன்முறைப்படுத்த வேண்டும். மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்குநரகம் உருவாக்க வேண்டும். மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும். எமிஸ் பணிகளில் இருந்து முதுநிலை ஆசிரியா்களுக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment