Sunday, October 20, 2024

மாரடைப்பு வரும் முன் தோன்றும் அறிகுறிகள்.. இதை புறக்கணிக்காதீர்கள்!

கொரோனாவுக்குப் பிறகு, இதயம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சில அறிகுறிகள் தோன்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அது எந்த மாதிரியான அறிகுறிகள் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன், லேசாக நெஞ்சு வலி ஏற்படும். நீங்கள் அதை அசிடிட்டி என்று நினைத்து புறக்கணிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. மாரடைப்பு வருவதற்கு முன் ஏற்படும் வலி பெரும்பாலும் இடது பக்கத்தில் வரும்.

மாரடைப்புக்கு முன் தோன்றும் அறிகுறிகளில் முக்கியமானது தோள்பட்டை மற்றும் கைகளில் வலி ஏற்படும். மேல் இடது தோள்பட்டையில் கடுமையான வலி இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாரடைப்புக்கு முன் சில சமயங்களில் உள்ளங்கையிலும் கைகளிலும் கடுமையான வலி உணரப்படுகிறது. தாங்க முடியாத வலி ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

அதேபோல், எந்த காரணமும் இன்றி நீங்கள் முதுகுவலியால் அவதிப்பட்டால் மருத்துவரை அணுகி அதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். இதுவும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

மாரடைப்பு வருவதற்கு முன் தாடைகளில் வலி ஏற்படும். அதுவும் குறிப்பாக இடது தாடையில் திடீரென வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News