Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்த சங்குப்பூ ஏராளமான நோய்களுக்கு மருந்தாகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அவை எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை பார்ப்போம்.
சங்குப்பூ கொடி வகையை சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது வெள்ளை, நீலம், கருநீலம், ஊதா, வெண்மை கலந்த கருநீலம், உள்ளிட்ட நிறங்களில் காணப்படுகிறது. இந்த பூ ஆன்மீகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சங்குப்பூ மற்ற மலர்களை போல் அதிக நறுமணம் கொண்டவை . இதன் மருத்துவக் குணங்களும் ஏராளம். சங்குப் பூச்செடியின் வேரில் இருந்து சாறு பிழிந்து மூக்கில் 5 சொட்டுகளை விட்டால் போதும் ஒற்றைத் தலைவலி பறந்து ஓடிவிடும்.
அடிக்கடி சளி பிடித்தால் சங்கு பூ செடியின் இலைகளை கல் உப்பு, கடுகு எண்ணெய்யையுடன் அரைத்து அதன் பேஸ்ட்டை நெஞ்சு பகுதியில் பூச வேண்டும். அப்போது சளி பிரச்சினை குணமாகும். மேலும் இந்த பேஸ்ட்டை வீக்கம் இருக்கும் இடத்தில் போட்டால் வீக்கம் குறையும். இந்த பூ மன அழுத்தத்தை குறைக்கும்.
நம்மை சுறுசுறுப்பாக்கும். இந்த பூவில் டீ குடிக்கலாம். இந்த பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அத்துடன் இஞ்சி சாறு சேர்த்து குடிக்கலாம். இதற்கு சுவைக்காக சர்க்கரை சேர்க்காமல் கருப்பட்டி, பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.
சங்குப்பூ உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும பிரச்சினைகளுக்கும் நன்மை பயக்கும். சங்குப் பூவின் வேரை காயவைத்து பொடி செய்து அத்துடன் தேன், ரோஸ் வாட்டர் கலந்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பரு படிப்படியாக குறையும். சருமம் தங்கம் போல் ஜொலிக்கும். உள்ளங்கை, உள்ளங்கால்களில் அதிக வியர்வை வந்தால் அந்த இலைகளை பிழிந்து 2 ஸ்பூன் சாறு எடுத்து இத்துடன் 7, 8 துளி இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் வியர்வை பிரச்சினை குறையும்.
வயிற்றை சுத்தம் செய்யவும் இந்த பூச்செடியின் விதைகளை பயன்படுத்தலாம். இந்த பூச்செடியின் விதைகளை 2 கிராம் எடுத்து 2 சிட்டிகை, உப்பு, மற்றும் 2 சிட்டிகை சுக்கை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து இரவில் குடித்து வரலாம். இந்த இலைகள் துவர்ப்பு சுவை, வெப்பத்தன்மை கொண்டவை.
இவை சிறுநீரை பெருக்கும், குடல் புழுக்களை அழிக்கும். உடலில் வெப்பத்தை தணிக்கும். தலை நோய், கண் நோய்களை கட்டுப்படுத்தும். சங்குப்பூவின் சாறு கல்லீரலை பலப்படுத்தும். தேமல், கரும்புள்ளிகளை குணப்படுத்தும். சங்குப்பூவின் விதை புளிப்பாக இருக்கும். உடலுக்கு வலிமை சேர்க்க சர்பத், பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகிறது. சங்குப்பூ ஏறு கொடி வகையை சார்ந்தது.
No comments:
Post a Comment