Monday, October 7, 2024

SBI வங்கியில் 10,000 காலிப்பணியிடங்கள்

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வங்கி சேவைகளை அதிகரிக்க நடப்பு நிதியாண்டில் சுமார் 10,000 புதிய ஊழியர்களை நியமிக்க முயற்சித்து வருகிறது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சீரான வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்காகவும், தனது டிஜிட்டல் சேனல்களின் பயன்பாட்டை அதிகரிக்க முதலீடு செய்துள்ளது. மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி வங்கியின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,32,296 - ஆக உள்ளது.

இதில், கடந்த நிதியாண்டின் இறுதியில் 1,10,116 அதிகாரிகள் வங்கியின் பட்டியலில் இருந்தனர். தற்போது ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை இதை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம்."தொழில்நுட்பத் துறையிலும், பொது வங்கி துறையிலும் நாங்கள் எங்கள் பணியாளர்களை அதிகரித்து வருகிறோம். 

என்ட்ரி லெவல் ஜாப்களுக்கும், எக்ஸ்பீரியன்ஸ்டு லெவல் ஜாப்களுக்கும் சுமார் 1500 பணியாளர்களை சேர்க்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளோம்" என்று எஸ்பிஐ வங்கியின் சேர்மேன் சி.எஸ் செட்டி தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் விண்ணை எட்டி வருகிறது, டிஜிட்டல் மயம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, நாங்கள் அனைத்து நிலைகளிலும் எங்கள் ஊழியர்களை தொடர்ந்து மறு தேர்வு செய்கிறோம். SBI வங்கி வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் சிறந்த வங்கி அனுபவத்தை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெட்வொர்க் விரிவாக்கத்தைப் பொறுத்தவரை, SBI பேங்க் நடப்பாண்டில் நாடு முழுவதிலும் சுமார் 600 கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. மார்ச் 2024 நிலவரப்படி SBI நாடு முழுவதும் 22,542 கிளைகளைக் கொண்டுள்ளது.எங்களிடம் கிளை விரிவாக்க திட்டங்கள் உள்ளன. புதிதாக திறக்கப்பட உள்ள இடங்கள் பல உள்ளன.

அதற்காக சுமார் 600 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். இதைத் தவிர, SBI 65,000 ATM-களைக் கொண்டுள்ளது. நாங்கள் சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறோம். மேலும் ஒவ்வொரு இந்தியருக்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும் நாங்கள் வங்கி சேவையை வழங்குகிறோம் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம் என்றும் செட்டி கூறியுள்ளார். பல டெக் நிறுவனங்களும் பணி நீக்கங்களை அறிவித்திருக்கும் நிலையில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது புதிதாக தேர்வு எழுதும் மாணவர்கள் ஆனாலும் சரி, ஏற்கனவே வங்கிகளில் பணிபுரிந்து மாற்று வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆனாலும் சரி சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News