இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஆன்லைன் மோசடிகளை தவிர்ப்பதற்காக ஒரு முக்கிய உத்தரவினை வங்கிகளுக்கு பிறப்பித்தது.
அதாவது இன்றைய காலத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் வங்கிகளில் இருந்து மெசேஜ் அனுப்புவது போல் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பி பணத்தை அபகரிக்கிறார்கள். இதனால் அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்படும் நிலையில் ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க டிராய் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தது.
அதன்படி செல்போன் நிறுவனங்களில் இனி வங்கிகள் முறையாக மெசேஜ் அனுப்புவது குறித்து பதிவு செய்ய வேண்டும். அதாவது வங்கிகளில் இருந்து URLs, APKs உள்ள எஸ்எம்எஸ் களை தடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கு செல்பேசி நிறுவனங்களிடம் பதிவு செய்ய நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவகாசம் முடிவடைந்துவிட்டது. மேலும் இதன் காரணமாக செல்பேசி நிறுவனத்தில் பதிவு செய்யாத வங்கிகளின் எஸ்எம்எஸ் இனி வாடிக்கையாளர்களை சென்றடையாது.
No comments:
Post a Comment