Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 29, 2024

TNPSC Group 4 பதவி வாரியாக காலி இடங்கள் முழு விவரம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பதவி வாரியான காலியிடங்கள் மற்றும் கடந்த ஆண்டு கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.

இந்தநிலையில், ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்தது.

இதற்கிடையில், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டன. புதிதாக 2208 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு, தற்போது குரூப் 4 தேர்வுக்கு மொத்தமாக 8932 காலியிடங்கள் உள்ளன.

இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இன்று (அக்டோபர் 28) வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் விபரங்கள் மற்றும் கடந்த ஆண்டு கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

பதவி வாரியான காலியிட விபரம்

கிராம நிர்வாக அலுவலர் - 400

இளநிலை உதவியாளர் (அமைச்சுப் பணிகள், வாரியங்கள்) - 3669

பில் கலெக்டர் (அமைச்சுப் பணிகள்) - 99

தட்டச்சர் (அமைச்சுப் பணிகள், வாரியங்கள்) - 2406

சுருக்கெழுத்து தட்டச்சர் (அமைச்சுப் பணிகள், வாரியங்கள்) - 643

முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்) - 25

ஆய்வக உதவியாளர் (தமிழ்நாடு தடய அறிவியல் துறை) - 32

தனி உதவியாளர் - 1

தனி எழுத்தர் - 2

இளநிலை நிர்வாகி - 34

வரவேற்பாளர் - 1

பால் கணக்கீட்டாளர் - 15

வனப் பாதுகாவலர் - 171

வனப் பாதுகாவலர் (ஓட்டுநர் உரிமம்) - 192

வன கண்காணிப்பாளர் - 526

வன கண்காணிப்பாளர் (பழங்குடியினர் இளைஞர்கள்) - 504

இளநிலை ஆய்வாளர் - 18

விற்பனையாளர் - 194

கடைசியாக 2022 ஆம் ஆண்டில் நடந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் என்பது 200 கேள்விகளுக்கு எத்தனை பதில்கள் சரியானவை என்பதை குறிப்பதாகும்.

வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான 2022 கட் ஆஃப்

பொதுப் பிரிவு - 168

பி.சி - 167

எம்.பி.சி - 167

பி.சி.எம் - 160

எஸ்.சி - 164

எஸ்.சி.ஏ - 162

எஸ்.டி - 160

தட்டச்சர் பணிகளுக்கான 2022 கட் ஆஃப்

பொதுப் பிரிவு - 163

பி.சி - 159

எம்.பி.சி - 159

பி.சி.எம் - 141

எஸ்.சி - 155

எஸ்.சி.ஏ - 155

எஸ்.டி - 144

ஸ்டெனோகிராபர் பணிகளுக்கான 2022 கட் ஆஃப்

பொதுப் பிரிவு - 157

பி.சி - 157

எம்.பி.சி - 150

பி.சி.எம் - 93

எஸ்.சி - 129

எஸ்.சி.ஏ - 87

எஸ்.டி - 95

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top