Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 7, 2024

12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
2023- 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. பிறகு இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் 2,768 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.


தொடர்ந்து இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 26,510 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். தேர்வை மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் எழுதினர். இவர்கள் அனைவரும் ஏற்கெனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.

8 ஆயிரம்+ இடைநிலை ஆசிரியர் இடங்கள் காலி

இந்த நிலையில் இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்குத் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 12 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் எதுவும் நடைபெறாத சூழலில், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைரலாகும் தேர்வர்களின் பதிவுகள்

இதுகுறித்து பல்வேறு பதிவுகள் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க கல்வியால் மட்டுமே முடியும்.

"ஆசிரியர் தொழிலை விட சமுதாயத்திற்கு முக்கியமான தொழில் உலகில் வேறு எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன்- அப்துல் கலாம்

கல்வி நாளைய தலைமுறையை செழிப்பாக்கும்.

கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே – பாரதிதாசன்

இடைநிலை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளாக காலியாக உள்ள ஆசிரியர் (Teacher ) பணியிடங்களில் SGT & BT/BRTE TRB தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்கு, கூடுதல் பணியிடம் உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் 75 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை நினைவூட்டுகிறோம்'' என்பன உள்ளிட்ட பல்வேறு பதிவுகள் அதில் பதிவிடப்பட்டு வருகின்றன.

அதேபோல ஆசிரியர் பயிற்றுநர் இடங்களையும் நிரப்பக் கோரிக்கை வலுத்து வருகின்றது. இதனால், Increase BT TRB Vacancy என்ற தலைப்பில், #increase_BT_BRTE_TRB_vacancy2024 #Increase_SGT_TRB_Vacancy என்ற ஹேஷ்டேகுகள் எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News