Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 17, 2024

14 நாட்கள் தொடர்ந்து இஞ்சி சாப்பிட்டால் .....

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

வீட்டு சமையலறையில் இருக்கும் பெரும்பாலான உணவுகள் ஆரோக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும். அதில், இஞ்சி தனித்துவ பண்புகளை தனக்குள் அடக்கி வைத்துள்ளது.

இஞ்சியானது நம் உடலுக்கு பலவகையான ஆரோக்கிய நன்மைகளை தரும். இது உணவில் பயன்படுத்தப்படும் மசாலா பொருளாக மட்டுமல்லாமல் டீயிலும், மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கஷாயத்தையும், ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியில் பல்வேறு ஆரோக்கியமான, நன்மை செய்யும் என்சைம்கள் உள்ளது. இது உடலில் தொற்றுநோயை எதிர்த்து போராடவும், உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் பெரிதும் உதவும்.

இஞ்சியில் கார்போஹைட்ரேட் (100 கிராமுக்கு 18 கிராம்), புரதம் (100 கிராமுக்கு 2 கிராம்), வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் உள்ளது. அந்தவகையில், இஞ்சியை 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

செரிமானம்:

தொடர்ந்து 14 நாட்கள் இஞ்சி சாப்பிட்டு வந்தால் செரிமானம் மேம்படும். இது இரைப்பை அமிலத்தை ஒழுங்குபடுத்தும். இது குடல் தசைகளை சீராக்கி, நமது உணவு சரியாக ஜூரணமாக உதவி செய்யும். அதேபோல், தினமும் இஞ்சி சாப்பிடுவது வயிற்று வலி, வீக்கம் மற்றும் அஜீரணத்தை குறைக்கும்.

வீக்கம் முறையும்:

இஞ்சியில் ஜிஞ்சரால் என்ற பொருள் உள்ளது. இஞ்சி ஒரு இயற்கையான அழற்ஜி எதிர்ப்பு பண்புகளை பெற்றிருக்க இதுவே காரணம். இது உங்கள் உடலில் உள்ள அழற்ஜியை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவி செய்து, வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.

கெட்ட கொலஸ்ட்ரால்:

இஞ்சி இயற்கையாகவே இரத்தம் உறைவு பிரச்சனையை சரி செய்யும். எனவே, இரத்த உறைவு பிரச்சனையை சரிசெய்ய மருந்தை உட்கொள்பவர்கள் இஞ்சியை சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் 14 நாட்களுக்கு இஞ்சியை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள அழுக்கு கொழுப்பை கரைத்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும், இஞ்சி சாப்பிடுவதால் இதய நோய்களும் குறையும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்:

இஞ்சியை 14 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது சளி, இருமல் மற்றும் வைரஸ் நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.

இரைப்பை இயக்கம்:

14 நாட்களுக்கு தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிட்டு வந்தால் வயிற்றின் உள் செயல்பாடுகள் தொடர்பான பிரச்சனை சரியாகும். இது வயிற்று புண்கள் அல்லது கட்டிகளின் அபாயத்தையும் குறைக்கிறது. இஞ்சி சாப்பிடுவது குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் உதவும்:

கர்ப்பத்தின் ஆரம்ப காலக்கட்டங்களில் பெண்களுக்கு ஏற்படும் சுகவீனத்திலிருந்து நிவாரணத்தை இஞ்சி தருகிறது. கர்ப்பிணிப் பெண்களின் குமட்டலுக்கு இஞ்சி பெரிதும் உதவி செய்யும்.

குளிர் மற்றும் மழைக்காலம்:

இஞ்சி சாப்பிடுவது நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு பெரிதும் உதவும். பெரும்பாலானவர்கள் சளி இருக்கும்போது இஞ்சியை தேனுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால், தொண்டையில் உள்ள சளியை குறைத்து விரைவில் சரி செய்யும். அதேபோல், வறட்டு இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

வலி:

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் வலியை குறைக்கும். அதேபோல், மாதவிடாய் காலத்திற்கு முன் பெண்களுக்கு உணரப்படும் வலியை கையாள்வதில் இஞ்சி நன்மை தரும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கவும் உதவும்.

குமட்டல்:

குமட்டலை போக்க இஞ்சி பயனுள்ளதாக இருக்கும். இது வயிற்று வலி ஏற்பிகளை தடுக்க உதவும் கூறுகள் உள்ளது. எனவே, இது வாந்தி, குமட்டல் உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்க பெரிதும் உதவும். பயணத்தின்போது வாந்தி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இஞ்சியை எடுத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News