Join THAMIZHKADAL WhatsApp Groups
மயிலாடுதுறை மாவட்டம் துலாக்கட்டத்தில் காவிரி ஆற்றின் கரைகளில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடைபெறும். இந்த துலா உற்சவத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி கரைகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஐப்பசி மாதம் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் 15-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவ. 23-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment