Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு வருகிற 18-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அவர் இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: "உயர்கல்வித் துறை குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) அரசு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது கலந்தாய்வு முறையில் பணியிட மாற்றம் பெற விரும்பினால் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரி முதல்வரின் குறிப்புரை மற்றும் பரிந்துரைகளுடன் தேவையான சான்றுகளை நவம்பர் 18-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்" என்று ஆபிரகாம் கூறியுள்ளார்.
இணையதளத்தில் காலியிடங்கள் விவரம்:"இதற்கிடையே, அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பாடவாரியாக ஆசிரியர் காலிப் பணியிடங்களின் விவரம் தொழில்நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தில் (www.dte.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment