Join THAMIZHKADAL Telegram GroupJoin THAMIZHKADAL WhatsApp Groups
|
வ.உ.சிதம்பரனார் |
திருக்குறள்:
"பால் பொருட்பால்
அதிகாரம்: தீ நட்பு
குறள் எண்:815
செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
பொருள்:காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்."
பழமொழி :
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
Where there is anger, there may be excellent qualities.
இரண்டொழுக்க பண்புகள் :
*என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.
*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.
பொன்மொழி :
நீ எதுவாக இருக்க விரும்புகிறாயோ அதற்கு அருகில் சென்று விட முனைந்து செயல்படு.-சாக்ரடீஸ்
பொது அறிவு :
1. ஈராக் நாட்டின் தலைநகரம்?
விடை:பாக்தாக்
2. தமிழ்நாட்டின் இரசூல் கம்சதோவ் என்று பாராட்ட பெறுவர் யார்?
விடை: பாரதிதாசன்
English words & meanings :
Aisle -a passage between seats, noun. இடையில் அமைந்துள்ள பாதை. பெயர்சொல். isle -island. noun. தீவு. பெயர் சொல். both homonyms
வேளாண்மையும் வாழவும் :
"கையால் களையெடுப்பது
பூண்டு, லவங்க எண்ணெய், வெண்காரம்
சாப்பட்டு உப்பை தெளித்தல்"
நவம்பர் 18
வ. உ. சி அவர்களின் நினைவுநாள்
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை[2](V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[3] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.
நீதிக்கதை
மகிழ்ச்சி
ஒரு ஊரில் ஒருவர் வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார். அதிக லாபம் இல்லை என்றாலும், தனது வாழ்க்கையை மகிழ்வுடன் நடத்தி வந்தார்.
அப்போது அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தை பற்றிய ஒரு வதந்தி பரவிக் கொண்டிருந்தது. பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையை பார்த்து நிற்கும் பொழுது,நமது நிழல் விழும் இடத்தில் புதையல் இருப்பதாக பேசிக் கொண்டனர்.
இதனைக் கேட்ட அவர், உடனே தனது வியாபாரத்தை விட்டுவிட்டு, மறுநாள் காலையில் புதையலை எடுக்க பாலைவனத்தை நோக்கிச்
சென்றார்.மலையை நோக்கி நின்று தனது நிழல் விழும் இடத்தில் தோண்ட ஆரம்பித்தார்.
அதுவரை வியாபாரத்தில் கவனம் செலுத்தியவர் தற்போது புதையலை எடுக்க காலையிலிருந்து நிழல் விழும் இடத்திலிருந்து தோண்டினார். மாலையாகும்போது நிழல் அவரது காலடிக்குள் வந்து விட்டது. இதனால் ஏமாற்றமடைந்த அவர் அழுது புலம்பிக் கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த துறவி ஒருவர் அவரிடம் "உன்னிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதை விட்டுவிட்டு இல்லாத ஒன்றைத் தேடினால் துயரம் தான் ஏற்படும்" என்று கூறினார்.
நீதி: இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்வதே, வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல்.
இன்றைய செய்திகள்
18.11.2024
* இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
* பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான கால வரம்பு, நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
* அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் என, ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நிர்வாகி விவேக் ராமசாமி கூறியுள்ளார்.
* உலக கேரம் போட்டி: 3 தங்கம் வென்று தமிழக வீராங்கனை காசிமா சாதனை. சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை காசிமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
* மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி தொடர்ந்து 5-வது வெற்றி பெற்று அசத்தல்.
Today's Headlines
Union Textiles Minister Giriraj Singh said that Tamil Nadu plays an important role in India's textile production.
The deadline for insurance under the Prime Minister's Crop Insurance Scheme has been extended till November 30.
Heavy rain in 13 districts in Tamil Nadu today: Meteorological Department warns.
Vivek Ramasamy, the new administrator of the Trump administration, has said that government jobs in the United States will be drastically reduced.
World Carrom Championship: Tamil Nadu player Kasima wins 3 golds.
Women's Asian Champions Cup Hockey Tournament: Indian team wins 5th in a row
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment