Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 3, 2024

200-க்கும் மேற்பட்ட நரம்புகளை தூண்டும் தோப்புக்கரணம் - போடும் முறை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தோப்புக்கரணம் ஏன் போடப்படுகிறது? பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட என்ன காரணம்? தோப்புக்கரணம் போடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன?

தோப்புக்கரணத்தை போடும் முறை என்ன? இதை சுருக்கமாக பார்ப்போம்.

"தோர்பி" என்றால் "கை" என்று பொருள். "கர்ணம்" என்றால் "காது" என்று பொருள். கைகளால் காதைப் பிடித்துக் கொண்டும், நெற்றிப் பொட்டில் குட்டிக் கொண்டும் முழஙகாலை மடக்கி, மடக்கி நிமிர வேண்டும். இதைத் "தோர்பிகர்ணம்' என்பார்கள். அதுவே நாளடைவில் தோப்புக் கரணமாக மாறியதாம். இதற்கான ஆன்மீக காரணமும், மருத்துவ நன்மைகளும் காணலாம்.

பிள்ளையார்: கஜமுகாசுரன் என்ற ஒரு அசுரன் இருந்திருக்கிறான். அவன் தான் பெற்ற வரத்தின் வலிமையால், தேவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தான். அதுமட்டுமல்லாமல் அவர்களை நிறைய கொடுமைகளையும் தேவர்களுக்கு ஏற்படுத்தி வந்துள்ளான்.

அதில் முக்கியமானதுதான் தோப்புக்கரணம்.. அதாவது, தன்னை பார்க்கும்போதெல்லாம், தோப்புக்கரணம் போட வேண்டும் என்று உத்தரவு போட்டானாம் அந்த அசுரன்.. இதனால், தேவர்களும், அந்த அசுரனுக்கு பயந்துக்கொண்டு அதன்படியே தோப்புக்கரணம் போட்டு வந்திருக்கிறார்கள். எனினும் அசுரனின் இந்த தொல்லை தாங்காமல், விநாயகரிடம் சென்று முறையிட்டுள்ளார்கள். உடனே பிள்ளையாரும் கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார்.

புராண காரணம்: வந்திருப்பது விநாயகர் என்று தெரிந்தும்கூட, கஜமுகாசுரன் விநாயகரையும், தோப்புக்கரணம் போடுமாறு உத்தரவிட்டானாம். இதனால் கோபம் அடைந்த விநாயகர் தன்னுடைய தந்தத்தாலேயே, அந்த அசுரனை குத்தி கொன்றுவிட்டாராம். இதனால் தேவர்கள், நன்றி சொல்லும்விதமாக, விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு மரியாதை செலுத்த துவங்கினார்களாம்.. எனவேதான், இப்போதுவரை பக்தர்களும் விநாயகருக்கு தோப்புக்கரணம் செலுத்துகிறார்கள்.

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவதன் மூலமும், நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதன் மூலமும் நம் உடலில் இருந்து குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்படுகிறது... நம்முடைய நாடி நரம்புகள் சுறுசுறுப்படைந்து, உடலும் மனமும் உற்சாகம் கொள்கின்றது.

எப்படி போடுவது: தோப்புக்கரணம் போடும்போது நம்முடைய தோள்பட்டை அகலத்துக்கு கால்களை பிரித்து வைத்து நிற்க வேண்டும்.. பிறகு, இடது கையை மடக்கி இடது கையின் பெருவிரலால் வலது காது மடலின் நுனியை பிடித்து கொள்ள வேண்டும். அப்போது, கட்டை விரல் காதின் முன்புறமும், ஆள்காட்டி விரல் காதின் பின்புறமும் இருக்க வேண்டும். அதேபோல, வலது கையானது இடது கையின் மேல் இருக்க வேண்டும்.

2 கால்களையும் மடக்கி முதுகை வளைக்காமல் நேராக உட்காரும் நிலையில் தோப்பு கரணம் போட வேண்டும். உட்காரும் நிலையில், முடிந்த அளவுக்கு தோப்புக்கரணம் போடலாம். ஆனால், எழும்போது மூச்சை வெளியே விட்டபடியே எழ வேண்டும்.

காது மடல்கள்: நம்முடைய வலது பக்க மூளை இடது பக்கத்திலும் இடது பக்க மூளை வலது பக்கத்திலும் இருப்பதால் கைகளை நாம் பிடிக்கும்போது சரியான அளவில் அவை தூண்டப்படுகின்றன. காதுமடல்களை ஒட்டிச் செல்லும் நரம்புகளை நாம் பிடித்து இழுப்பதால் நம்முடைய ஞாபகசக்தி அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மூளையிலுள்ள நரம்புகள் வலிமை பெறுகிறது. எனவேதான் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை பள்ளிகளில் தோப்புக்கரணம் செய்ய சொல்கிறார்கள்.

காதுக்கு அருகில் 200-க்கும் மேற்பட்ட நரம்புகள் பின்னிப் பிணைந்துள்ளன. அதை இழுக்கும் பொழுது, ரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது.. உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.

உட்கார்ந்து எழும்போது, காலில் இருக்கக்கூடிய சோலியஸ் என்ற தசை இயங்கி, ரத்த ஓட்டம் சீராகிறது.. இதனால், அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது.. காதுகளில் தான் இதயம், சிறுநீரகம், மூளை, வயிறு கண்கள் கீழ், மேல்தாடை, ஈரல், காது நரம்பு என அத்தனை உறுப்புகளின் தொடர்பு புள்ளிகளும் உள்ளதால்தான், மொத்த உடல் உறுப்புகளும் பலன் பெறுகின்றன.

எலும்பு தசைகள்: முறையான நடைமுறைகளுடன் தோப்புக்கரணம் போடுவதால் கால்கள், இடுப்பு, முதுகு மற்றும் கைகளில் உள்ள தசைகளை வலுப்பெறுகிறது. செரிமானம் அதிகமாகிறது..

தூக்கமின்மை பிரச்சனை தீர்கிறது.. இடுப்பிலுள்ள ஜவ்வு, எலும்பு தசைகளும் பலம்பெறுகின்றன. கர்ப்பிணிகளை தோப்புக்கரணம் போடச் சொல்ல காரணம், இதனால், கருப்பை சுருங்கிவிரிந்து, சுகப்பிரசவம் எளிதாக நடக்குமாம். அதனால்தான், அமெரிக்காவில் இன்று தோப்புக்கரணம் தலைச்சிறந்த உடற்பயிற்சி என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகள், "சூப்பர் பிரெய்ன் யோகா" என்று கூறி, பிரபலப்படுத்தி கொண்டாடுகின்றன. காதுகளின் கீழ் புரத்தில் முக்கிய உடல் உறுப்புகளின் நரம்பு மண்டலம் உள்ளது.. இதனை அக்கு பிரசர், அக்கு பஞ்சர் புள்ளிகள் என்கிறார்கள்.

ஆனால், அதிகாலையில் சூரிய வெளிச்சத்தில் தோப்புக்கரணம் போடும்போதுதான் அதிக பலனை பெற முடியும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, 7, 14, 21 முறைகள் என, அவரவருக்கு முடிந்த எண்ணிக்கையில், தொடர்ந்து தினமும் செய்யும்போது கூடுதல் பலன்கள் கிடைக்குமாம். 

தினமும் 15 முதல் 50 தோப்பு கரணம் போடுவது பெரும் பலனை பெற்றுத்தருமாம்.. பெண்கள் கர்ப்ப காலம், மாதவிடாய் காலம் தவிர்த்து செய்யலாம். 

முதல் முறையாக செய்பவர்கள் 5 வரை செய்து, பிறகு அதிகப்படுத்தி கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News