சீரகம் நமது சமையலில் ஒரு முக்கிய அங்கமாகும். இது வெறும் சுவைக்கு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்களுக்காகவும் சேர்க்கப்படுகிறது.
இது வயிற்று தொப்பையை குறைக்கவும் அதிகம் பயன்படுகிறது. உடல் எடை குறைப்பிலும், உடல் கொழுப்பு சதவீதத்தை குறைக்கவும் சீரகம் உதவும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடவே, பசியை கட்டுப்படுத்துவதிலும், செரிமானத்தை சீராக்குவதிலும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் சீரகம் உதவுகிறது.
தொடர்ச்சியாக சீரகத்தை உண்டுவந்தால் இடுப்புப்பகுதி மெலிதாக்க உதவும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. உங்கள் சாப்பாட்டில் சீரகத்தை சேர்த்துக்கொள்வதால் உடல் எடையும் குறையும், தேவையற்ற தொப்பை கொழுப்பையும் அது குறைக்கும். அந்த வகையில், உங்களின் தொப்பை கொழுப்பை குறைக்க சீரகத்தை இந்த 5 வழிகளில் எடுத்துக்கொள்ளவும்.
சீரகப்பொடி உடன் தேன்
நல்ல கொதிக்க வைத்த தண்ணீரில் அரை டீ ஸ்பூன் சீரகப்பொடி, 1 டேபிள் ஸ்பூன் தேன் உடன் கலக்கவும். இதனை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். சீரகத்தில் உள்ள மூலக்கூறுகள் வளர்சிதை மாற்றத்தை தூண்டும். தேனில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நச்சுகளை வெளியேற்றி, ஒல்லியான தேகத்தை கொடுக்கும்.
மோரும்... சீரகமும்...
1 கிளாஸ் மோரில், 1 டீ ஸ்பூன் சீரகத்தை சேர்த்து அதனை அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதனை நன்கு அரித்து குடித்தால் தொப்பை கொழுப்பு குறையும். இது செரிமானத்தை சீராக்கும். இது உடல் எடையை குறைக்கச் செய்து தொப்பையையும் குறைக்கும். மேலும் மோர் குடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கும்.
சீரகப் பொடி மற்றும் யோகர்ட்
துளியளவு சீரகப்பொடியை, அரை கப் யோகர்ட்டில் சேர்த்து அடிக்கடி அதை சாப்பிட்டு வந்தால் தொப்பை கொழுப்பு குறையும். சீரகத்தில் உள்ள மூலக்கூறுகள் வளர்சிதை மாற்றத்தையும், செரிமானத்தையும் சீராக்கும். யோக்ர்ட் குடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க உதவும். தினமும் இரண்டு முறை இதை குடித்து வந்தால் உங்களின் தொப்பையே ஒரு நாள் காணாமல் போகும்.
சீராக தண்ணீர்
1 லிட்டர் தண்ணீரில், 1 டீ ஸ்பூன் சீரகத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, அதனை நன்கு அரிந்து காலையில் அருந்தவும். இதுவும் உடல் எடை குறைப்புக்கு உதவும்.
எலுமிச்சை நீரில் சீரகப்பொடி
அரை டீ ஸ்பூன் சீரகப்பொடியை 1 கிளாஸ் எலுமிச்சை நீர் கலந்த தண்ணீரில் சேர்க்கவும். அதனை சுடவைத்து காலையில் குடிக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை கொழுப்பு எளிதில் கரையும்.
No comments:
Post a Comment