Join THAMIZHKADAL WhatsApp Groups
வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பதால் அது மனிதனின் உடலுக்கு பல வகைகளில் நன்மைகளை தருகின்றனவாம்.
அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக மழை காலத்தில் மட்டும் தான் நாம் அதிக அளவில் நீரை நன்கு காய்ச்சி வெந்நீராக குடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்போம். ஆனால் இயல்பாகவே இளம் சூட்டில் உள்ள நீரை தினமும் பருகி வந்தால் அது உடலுக்கு பல வகைகளில் நன்மை பயக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். வெதுவெதுப்பான நீர் என்பது கொதிநிலையில் இல்லாமல், வெதுவெதுப்பாக குடிப்பதற்கு ஏதுவான சூட்டில் இருக்கும் நீர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நீரை குடிப்பது நம் உடலில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
காலையில் நாம் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதனால் அது நமது உடலை சுத்தப்படுத்த பெரிய அளவில் உதவுகிறது. இதனால் வியர்வை வெளியேறி, உடலில் உள்ள தேவையற்ற நீரும், உப்பும் நமது உடலை விட்டு வெளியேறும் என்றும் கூறப்படுகிறது. உடலில் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவு பொருட்களை இந்த வெந்நீர் வெளியேற்றுவதால், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் நமக்கு வராது என்கிறார்கள் மருத்துவர்கள். வயிற்று வலி, உப்புசம் மற்றும் ஜீரண கோளாறு போன்றவற்றிற்கும் இது ஒரு நல்ல அருமருந்தாக திகழ்கிறது
.
வெந்நீரை வெறும் வயிற்றில் அடிக்கடி குடித்து வருவதால், நரம்பு சம்பந்தமான நோய்கள் பெரிய அளவில் நீங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உயர்ந்த இரத்த அழுத்தம் உள்ள நபர்களும், அவ்வப்போது இளம் சூட்டில் உள்ள நீரை அருந்துவது, அந்த ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிய அளவில் உதவுமாம். இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது பலருக்கும் இருந்து வருகிறது. வெறும் வயிற்றில் இப்படி வெந்நீர் குடிப்பது, அந்த மன அழுத்தத்தை கூட குறைக்கும் திறன்கொண்டது என்கிறார்கள் மருத்துவர்கள்
மேலும் சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க, வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது மிகவும் நல்லது. நுரையீரல், இருதயம் போன்றவை சுறுசுறுப்பாக செயல்படவும், உடம்பில் சளி போன்ற பிரச்சனைகளை நீங்கவும் இந்த வெந்நீர் பெரிய அளவில் பயன்படுகிறது. இப்படி வெந்நீரை நாம் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அதிகப்படியான நன்மைகளை நாம் பெறலாம் என்று சில ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றது.
No comments:
Post a Comment