Join THAMIZHKADAL WhatsApp Groups
நாட்டின் 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்குமான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலன் பயக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் மத்திய அரசின் ஆயுஷ் மான் பாரத் திட்டம். 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம் ஏழை எளிய முதியவர்களுக்கு மட்டும் மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது. தற்போது ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29 ஆம் தேதி பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் படி வருமான வித்தியாசம் இன்றி 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களுக்கும் சுகாததார காப்பீடு வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளிலும் ரூ.5 லட்சம் வரையிலான காப்பீடு இலவசமாக வழங்கப்படுவதால் இந்த திட்டத்தின கீழ் பயன் பெறதங்கள் பெயரை பதிவு செய்ய மூத்த குடிமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆயுஷ்மன் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின்கீழ் பயனாளிகள் எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரத்தை தேசிய சுகாதார ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தேசிய சுகாதார ஆணையம் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
*ஆயுஷ்மான் பாரத் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லொடு செய்து கொள்ள வேண்டும். அல்லது https://beneficiary.nha.gov.in என்ற இணையதள பக்கத்திலும் விண்ணப்பிக்கலாம்.
* பயனாளிகளுக்கான ஆப்ஷனை தேர்வு செய்து லாக் இன் செய்ய வேண்டும்.
*கேப்ஷா மற்றும் மொபைல் எண் பதிவு செய்து லாக் இன் செய்ய வேண்டும்.
* பயனாளிகள் விவரங்கள், ஆதார் விவரங்கள் கேட்கும்.
* 70- வயதுக்கு மேற்பட்டவரா என்பதை ஆதார் மூலம் உறுதி செய்யப்படும்.
* தகுதியான பயனாளிகள் என்றால் கூடுதல் விவரங்கள் கேட்கப்படும்.
* ஆதார் எண், ரேஷன் அட்டை எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
* மத்திய அரசின் சுகாதார திட்டம், மத்திய ஆயுத போலீஸ் படையினருக்கான ஆயுஷ்மான் சி.ஏ.பி.எப் உள்ளிட்ட மத்திய அரசின் பிற சுகாதார திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் பயனாளியாக உள்ளீர்களா என கேள்வி எழுப்பும். ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக இருந்தால் பதிவு செய்ய முடியாது.
* ஆதார் அடிப்படையில் சுய விவரங்கள் தயாராக வைக்கப்பட்டு இருக்கும்.
* புகைப்படத்தை பதிவு செய்ய வேண்டும்.
* குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையும் பதிவிட வேண்டும்.
* இந்த விவரங்கள் பதிவு செய்து முடிந்ததும் மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* ஆப் மட்டும் இன்றி இணையதளம் வாயிலாகவும் இதே நடைமுறையை பின்பற்றி காப்பீட்டு அட்டையை பெறலாம்.
*ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மூத்த குடிமக்கள் இருந்தால் அவர்களுக்கு, தனியாக ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு டாப் அப் செய்யப்படும். ஆனால் 70 வயதுக்கு குறைவான குடும்ப உறுப்பினர்கள் இதில் பயன்பெற முடியாது.
* தனியார் மருத்துவ காபீடு, மாநில காப்பீடு திட்டம் ஆகியவற்றில் பதிவு செய்து இருந்தாலும் அவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியும்.
* பதிவு செய்த முதல் நாளில் இருந்தே மருத்துவ காப்பீடு பெறலாம். காத்திருப்பு காலம் எதுவும் கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment