Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்று வயதானவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் இடுப்பு வலி,மூட்டு வலி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.இதில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் கைகொடுக்கும்.
தேவையான பொருட்கள்..
*தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்து - ஒரு கப்
*ஏலக்காய் - ஒன்று
*சுக்கு - ஒரு துண்டு
*கருப்பட்டி - 1/2 கப்
செய்முறை விளக்கம்..
தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்தில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கிறது.இந்த கருப்பு உளுந்தை தண்ணீரில் போட்டு இரண்டு முதல் மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு காட்டன் துணியில் இந்த உளுந்தை பரப்பி இரண்டு நாட்களுக்கு வெயிலில் காய வைக்க வேண்டும்.
கருப்பு உளுந்து நன்றாக காய்ந்ததும் வறுக்க வேண்டும்.அதற்கு வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.பிறகு அதில் கருப்பு உளுந்தை போட்டு லேசாக வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.
அதன் பின்னர் சூடான உளுந்தில் இரண்டு ஏலக்காய் மற்றும் ஒரு துண்டு சுக்கு சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ஆறவிட வேண்டும்.பிறகு மிக்ஸி ஜாரை காட்டன் துணியில் துடைத்து கொள்ளவும்.பின்னர் வறுத்த கருப்பு உளுந்து கவலையை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதை தட்டில் கொட்டி சிறிது நேரத்திற்கு ஆறவிட்டு வேண்டும்.அதன் பின்னர் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் இந்த உளுந்து மாவை கொட்டி சேகரித்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை..
ஒரு கிண்ணத்தில் கருப்பு உளுந்து பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்து 1/4 கப் தண்ணீர் மற்றும் 1/4 கப் பால் ஊற்றி கரைக்கவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து கரைத்த உளுந்து பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
உளுந்து பால் பச்சை வாடை நீங்கியதும் தேவையான அளவு கருப்பட்டி சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.இந்த உளுந்து பாலை தொடர்ந்து குடித்து வந்தால் எலும்புகள் வலிமையாக இருக்கும்.ம்,மூட்டு வலி,இடுப்பு வலி போன்ற எலும்பு சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.
No comments:
Post a Comment