Join THAMIZHKADAL WhatsApp Groups
தஞ்சை அரசுப் பள்ளியில் 26 வயதாகும் ஆசிரியை ரமணி என்பவர் இன்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு தலையாக காதலித்து வந்தவர் நடத்திய வெறிச்செயலால் தஞ்சாவூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணி என்பவரை மதன் என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த சக ஆசிரியர்கள், ஆசிரியை ரமணியை மீட்டு அரசு மருததுவமனைக்கு சிகிக்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி உயிரிழந்தார்.
இதனிடையே கத்தியால் குத்திய மதன் குறித்து உடனடியாக போலீசுக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர் இதையடுத்து விரைந்து வந்து மதனை பிடித்து கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியை ரமணியை ஒரு தலையாக மதன் காதலித்து வந்ததாக கூறியுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறியதால் ரமணியை கத்தியால் குத்திக் கொன்றதாகவும் மதன் கூறியுள்ளார். கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி நான்கு மாதம் முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளார்.
இதனிடையே நடந்த சம்பவம் பற்றி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் கூறும் போது, ரமணியை கொலை செய்த மதன் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை ரமணியை கொன்றது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment