Join THAMIZHKADAL WhatsApp Groups
நிச்சயம் இந்த செய்தி நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். நாள்பட்ட நோயான நீரிழிவு நோய் இயல்பான வாழ்க்கைமுறையை தடுப்பதாகவே இருக்கிறது.
தினமும் மாத்திரை, உணவுக்கட்டுபாடு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைபிடித்தல் என அனைத்திலும் கவனம் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இதுவே எதிர்மறையான மன அழுத்தத்தை உண்டாக்கலாம். இதற்கிடையில் நீரிழிவு நோய் வந்தாலே சிறுநீரகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பது கூடுதல் பொறுப்பு. இத்தனை இடையூறுகளுக்கு இடையில் இந்த ஆய்வானது நீரிழிவு நோயாளிகளுக்கு சற்று ஆறுதலை அளித்திருக்கும்.
கனடாவில் BMJ நடத்திய இந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் SGLT2 inhibitor என்னும் மாத்திரையானது டைப் 2 டயாபடீஸ், சிறுநீரகக் கல் பிரச்சனை மற்றும் கீல்வாத வலி ஆகிய இந்த 3 நோய்களுடன் எப்படி வினைபுரிகிறது என்பதை கண்டறிய முயற்சி செய்துள்ளது. அதில் கிடைத்த குறிப்பில், இந்த மாத்திரை உடலில் உள்ள தேவையற்ற நச்சு நீரை வெளியேற்ற உதவுகிறது. இதனால் சிறுநீரகத்தில் செயல்பாடுகள் துரிதமாக இருக்கிறது. இப்படி தேவையற்ற நச்சு நீர் சீராக வெளியேறினாலே கீல்வாத பிரச்சனை மற்றும் சிறுநீரகக் கல் பிரச்சனை வருவது தடுக்கப்படுவதாக கண்டறிந்துள்ளது.
நீரிழிவு நோயாளிகள் அதிகமாக பாதிக்கப்படும் சிறுநீரகக் கல் பிரச்சனை மற்றும் கீல்வாதம் ஆகியவற்றிற்கு ஒரு சிறந்த தீர்வு அளிப்பதாக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளின் கூடுதல் நோய் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
இந்த மாத்திரையை வைத்து இதற்கு முன் நடத்திய ஆய்வில் சீக்கிரமே இறக்கும் காலத்தை குறைத்து ஆயுளை நீட்டிக்க உதவுவதாக கூறியது. தற்போது மீண்டும் நடத்தப்பட்ட ஆய்வில் மறைமுகமாக சிறுநீர்க ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment