இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்காக பலரும் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். இந்நிலையில் உடல் எடையைக் குறைக்க மருத்துவர் சிவராமன் முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இயற்கை உணவு முறை மற்றும் சித்த மருத்துவம் குறித்து ஊர் ஊராக மேடைகளில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் சித்த மருத்துவர் சிவராமன். சமூக வலைத்தளம் காலத்தில் மருத்துவர் சிவராமனுடைய மருத்துவக் குறிப்புகள், இயற்கை உணவு முறைகள் பெரிய அளவில் மக்களை சென்றடைகிறது.
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என ஒரு மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பான் என்பது சித்தர்கள் வாக்கு. அதாவது காலையில் இஞ்சிச்சாறு, மதியம் சுக்கு , மாலையில் விதை நீக்கிய கடுக்காய் ஆகியவற்றை சாப்பிடுவது நமது உடலில் நல்ல முன்னேற்றத்தை காட்டும் என மருத்துவர் கூறுகிறார்.
நெஞ்சு எரிச்சல், வயிறு உப்புதல், அஜீரன கோளாறு உடையவர்களுக்கு மிகச் சிறந்த மருந்து இஞ்சி சாறு தேன். காலையில் வெறும் வயிற்றில் 50மிலி இஞ்சி சாறுடன் 5மிலி தேன் 200 மிலி வெண்ணீர் மூன்றையும் கலந்து குடித்து வரவே உடல்பருமனில் நல்ல மாற்றத்தை பார்க்க முடியும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
மதியம் உணவில் ஒரு சிட்டிகை சுக்குடன் நெய் சேர்த்து சோற்றில் பிணைந்து சாப்பிட்டு வருவதும் உடலுக்கு நன்மை பயக்கும். தாயை விட கடுக்காய் மேலான ஒன்று என மருத்துவர் கூறுகிறார். கடுக்காயில் 6 இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, புளிப்பு, காரம், உப்பு என அறுசுவைகளும் உள்ளதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். அதனாலேயே தாயினும் மேலானது கடுக்காய் என்று கூறப்படுவதாக மருத்துவர் கூறுகிறார்.
நமது அன்றாட உணவில் இதை பழக்கப்படுத்தி கொண்டாலே உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
அதேபோல நீரிழிவு நோய் உள்ளவர்கள் காலையில் ஆவாரம்பூ டீ குடித்துவரவே உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
ஒரு வாரத்தில் முதல் 2 நாட்கள் நீராகாரம், அடுத்த 2 நாட்கள் இஞ்சி சாறு, அடுத்த 2 நாட்கள் ஆவாரம் பூ குடித்து வரவே உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களை தடுக்கலாம் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
No comments:
Post a Comment