Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 7, 2024

வித்யாலட்சுமி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் - திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று(நவ. 6) ஒப்புதல் அளித்துள்ளது.

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாதென்ற நோக்கத்தை இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வங்கிகளிடமிருந்து மாணவர்கள் கடன் பெற உத்தரவாதம் ஏதும் அளிக்கத் தேவையில்லை. தாங்கள் சேர்ந்துள்ள படிப்புக்கு தேவைப்படும் முழு தொகையையும் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில நாட்டின் உயர்தர கல்வி நிறுவனங்களில் சேரும் 7 லட்சம் புதிய மாணவர்கள் பயனடைவர். இத்திட்டத்துக்காக 2024-25 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்துக்கு ரூ. 3,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வரையறுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் 860 நிறுவனங்களில் சேர்ந்து பயில இடம் கிடைத்தால், மேற்கண்ட மாணவர்கள் இத்திட்டத்தில் கல்விக்கடன் பெற்று பயனடையலாம். அதன்படி, ஆண்டுதோறும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவர்.

மேற்கண்ட மாணவர்களுக்கு பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின்கீழ், 75 சதவிகித மத்திய அரசின் கடன் உத்தரவாதத்துடன் ரூ. 7.50 லட்சம் கடன் வழங்கப்படும்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் வரை இருக்கும் மாணவர்கள், பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின்கீழ், ரூ. 10 லட்சம் வரை கடன் பெற்றால், 3 சதவிகித வட்டிச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த மாணவர்கள் கல்விக்காக அளிக்கப்படும் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பிற சலுகைகளைப் பெற முடியாது.

பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தில், மாணவர்கள் எளிமையான முறையில் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். முழுக்க முழுக்க வெளிப்படையான முறையில் கடன் தொகை பெறும் நடைமுறை உள்ளது.

மாணவர்களுக்காக பிரத்யேகமாக டிஜிட்டல் முறையில் கடன் பெறும் வசதியும் உள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த தளமான “பிஎம்-வித்யாலட்சுமி” தளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்து கல்விக் கடன் பெறலாம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News