Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆதார் கார்டு (Aadhaar Card) ஒவ்வொரு இந்தியரும் வைத்திருக்க வேண்டிய முக்கியமான அடையாள சான்றாக உள்ளது.
பான் கார்டு, வங்கி கணக்கு, டிரைவிங் லைன்சென்ஸ், பாஸ்போர்ட் போன்ற அனைத்து விதமான முக்கிய ஆவணங்களையும் ஆதார் அட்டையுடம் இணைக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. புதிய ஆதார் அட்டையை பெற பதிவு செய்வதற்கு கூடுதல் அணுகுமுறை தேவைப்படுகிறது. புதிதாக ஆதார் அட்டை பெறும் போது டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்க முடியாது என்றாலும் , இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவருக்கும் எளிதாக பெறும் வகையில், ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான UIDAI தொடர்ந்து வசதிகளை அதிகரித்து வருகிறது.
ஆன்லைனில் ஆதார் அட்டையை பெற முடியுமா?
டிஜிட்டல் முறையில், ஆதார் அட்டையை (Aadhaar Card) முழுவதுமாக ஆன்லைனில் பெற முடியாது. இருப்பினும், நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருந்து, முதல் முறையாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கான நடைமுறைகள் எளிதாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் அட்டை பெறுவது எப்படி?
பதிவு மையத்திற்குச் செல்லவும்
புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட ஆதார் பதிவு மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். இந்த மையங்கள் நாடு முழுவதும் பரவி உள்ள இந்த மையங்களில், உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மையம் எது என்பதை அதிகாரப்பூர்வ UIDAI இணையதளம் மூலம் எளிதாகக் கண்டறிய முடியும்.
அப்பாயிண்ட்மெண்ட்டை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்
நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை தவிர்க்க, UIDAI ஆனது ஆன்லைன் சந்திப்பு முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவுசெய்தல் நேரில் செய்யப்பட வேண்டும் என்றாலும், நீங்கள் மையத்திற்கு வரும்போது உங்கள் பணியை கால தாமதம் இன்றி விரைவாக முடிப்பதை உறுதி செய்யும் வகையில், உங்களுக்கு ஏற்ற ஒரு வசதியான சந்திப்பு நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்யலாம்.
ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக்ஸ் தகவல்கள்
ஆதார் மையத்தில், அடையாள மற்றும் முகவரி சான்றுக்கான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் பாஸ்போர்ட்கள், வாக்காளர் ஐடிகள், உங்கள் வீட்டுக்கான பில்கள் மற்றும் பலவும் அடங்கும். கூடுதலாக, உங்கள் பயோமெட்ரிக் தரவு - கைரேகைகள், கருவிழி ஸ்கேன் மற்றும் புகைப்படம் உட்பட தகவல்கள் உஙக்ளிடம் இருந்து சேகரிக்கப்படும்.
ஆதார் எண் உருவாக்கம்
உங்கள் பதிவு முடிந்ததும், உங்களுக்கான தனிப்பட்ட ஆதார் எண் உருவாக்கப்படும். UIDAI உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு ஆதார் அட்டையை அனுப்பும். உங்கள் ஆதார் தயாரானதும், யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்து இ-ஆதார் எனப்படும் டிஜிட்டல் பதிப்பையும் பதிவிறக்கம் செய்யலாம்.
ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பித்தல் மற்றும் திருத்தங்கள் செய்தல்
உங்களிடம் ஏற்கனவே ஆதார் அட்டை இருந்தால், உங்கள் விவரங்களைப் புதுப்பிக்கவோ அல்லது திருத்தவோ விரும்பினால், அதிகாரப்பூர்வ UIDAI போர்டல் மூலம் ஆன்லைனில் எளிதாக மாற்றங்களைச் செய்யலாம்.
No comments:
Post a Comment