Join THAMIZHKADAL WhatsApp Groups
சூரசம்ஹாரம் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 2ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சூரசம்ஹாரம் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 14-ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment