Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 19, 2024

ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது எதற்கு தெரியுமா?.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

ஐயப்பன் தோன்றிய வரலாறு ;

பாற்கடலைக் கடைந்த பின் கிடைத்த அமுதத்திற்காக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது மகாவிஷ்ணு அழகிய மோகினி அவதாரம் எடுத்து அதை பகிர்ந்து கொடுக்கிறார். மோகினி பார்த்த சிவபெருமான் மோகினியின் அழகில் மயங்கினார். அப்போது இருவருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது .அவரே ஐயப்பன் ஆவார் .ஐயப்பனின் அவதார நோக்கமே மகிஷி என்ற அரக்கியை வதம் செய்வதாகும் .மகிஷம் என்றால் எருமை எருமை தலையுடன் மனித உடலை கொண்ட பெண் ஆவார். இவள் பிரம்மாவிடம் தனக்கு இரவா வரம் வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்.

அப்போது பிரம்மன் இவ்வுலகில் பிறந்தவர்கள் கட்டாயம் ஒரு நாள் இறக்க வேண்டும் . அதற்கு அவள் சிவனும் மகாவிஷ்ணுவும் சேர்ந்த சக்தியால் தான் மரணம் நிகழ வேண்டும் என வரம் கேட்கிறார். மேலும் ஒப்பற்ற ஆற்றலை வரமாக வேண்டும் என்றும் கேட்கிறார். அந்த ஒப்பற்ற வரத்தால் உலக மக்களை துன்புறுத்துகிறார். இந்நிலையில் சிவனும் விஷ்ணுவும் தங்களுக்குப் பிறந்த குழந்தையின் கழுத்தில் மணி ஒன்றைக் கட்டி சபரிமலை காட்டின் நடுவில் விட்டு விடுகின்றனர். அப்போது சிவ பக்தனான பந்தல மன்னன் ராஜசேகர பாண்டியன் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் செல்கிறார்.

நடுக்காட்டில் அழுகுரல் சத்தத்துடன் இருக்கும் குழந்தையை பார்க்கிறார். கழுத்தின் கண்டத்தில் மணிக்கட்டி கண்டெடுத்த குழந்தை என்பதால் மணிகண்டன் என பெயர் சூட்டுகிறார். குழந்தை பேரு இல்லாத ராணி மணிகண்டனை கடவுள் தனக்கு கொடுத்த குழந்தையாக எண்ணி வளர்க்கிறார் வளர்ந்த பின் அரசன் மணிகண்டனுக்கு இளவரசர் பட்டம் சூட்ட எண்ணுகிறார். அப்போது அரசருக்கு ஆண் குழந்தை பிறக்கின்றது. அரசவையில் இருந்த ஒரு மந்திரிக்கு மணிகண்டனுக்கு இளவரசர் பட்டம் சூட்டுவது பிடிக்க இயலாததால் அரசியின் மனதை மாற்றுகிறார் .ஐயப்பனை புலி அடித்து கொல்ல எண்ணுகின்றனர் .அவரும் அதற்கு இணங்க தனக்கு வயிற்று வலி இருப்பதாகவும் அதற்கு மருந்தாக புலிப்பால் கொடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

மணிகண்டனும் புலிப்பால் எடுப்பதற்காக காட்டுக்குள் செல்கிறார். அப்போது பந்தல மன்னன் தீவிர சிவ பக்தன் என்பதால் சிவனின் அம்சம் கொண்ட தேங்காயின் முக்கண்ணில் நெய் கலந்து கொடுத்து அனுப்புகிறார். இதனால் முதலில் இருமுடி கட்டியவர் ஐயப்பனை ஆவார். இதுவே நாளடைவில் பழக்கமாக மாறிவிட்டது . காட்டுக்குள் சென்ற ஐயப்பன் மகிஷி மக்களை வதம் செய்வதை காண்கிறார் .அவளுடன் போரிட்டு கொன்றுவிடுகிறார். மகிஷியின் உடலில் சாப விமோச்சனம் பெற்ற அழகிய பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டி கேட்க ஐயப்பனோ தான் பிரம்மச்சாரியத்தை கடைபிடிப்பதாக கூறுகிறார். இதனை தேவர்கள் பார்த்து மனமார வாழ்த்தி இந்திரன் ஆண் புலியாகவும் மற்ற தேவர்கள் பெண் புலியாகவும் மாறுகின்றனர்.

ஐயப்பனும் ஆண் புலி மீது அமர்ந்து பந்தல நாட்டிற்கு வருகிறார். பந்தல மன்னனும் ஐயப்பன் காட்டுக்குள் சென்ற சதி வேலையை அறிந்து கொள்கிறார். ஐயப்பன் அரசனிடம் தான் அவதரித்த நோக்கம் நிறைவேறி விட்டதாகவும் தற்போது தேவலோகம் செல்வதாகவும் கூறுகிறார். மேலும் தான் அம்பால் எய்த இடத்தில் ஒரு ஆலயம் எழுப்புமாறு கேட்டுக்கொள்கிறார் .அப்படி அவர் எய்த இடம் தான் சபரிமலை. அந்த இடத்தில் பந்தல மன்னனும் ஆலயத்தை கட்டுகிறார். என் அருளை பெற 41 நாட்கள் சைவ உணவை உட்கொண்டு பிரம்மச்சாரியத்தை கடைபிடித்து மனக்கட்டுப்பாடோடு சபரிமலை யாத்திரை செல்பவர்களுக்கு வேண்டிய வரம் கொடுப்பேன் என்றும் கூறுகிறார்.

இருமுடி உணர்த்தும் தத்துவம் ;

ஐயப்பனுக்கு இருமுடி கட்டுவதில் ஒரு முடியில் நெய் காய், பச்சரிசி, அபிஷேகம் செய்ய தேவையான பொருள் மற்றொரு முடியில் உணவுப் பொருள்கள் வைத்து கட்டுவதே இருமுடி கட்டுவதாகும். இதில் தேங்காய் சிவனின் ஸ்ருபமாகவும், நெய்யில் மகாவிஷ்ணு இருப்பதாகவும் இவற்றை சேர்ப்பதால் சிவனும் விஷ்ணுவும் ஒன்றாக சேர்வதை உணர்த்துவதாக சொல்லப்படுகிறது . மேலும் இதுவே நெய் தேங்காய் ஆகும் .இருமுடி என்பது நம் பாரத்தை சுமந்து ஐயப்பனின் திருவடியில் இறக்கி வைப்பது என்றும் சொல்லப்படுகிறது.

மானிடராய் பிறந்த நமக்கு இறைவன் மீது உள்ள பக்தி ஒரு முடியாகவும் ,உலக தேவைகள் மற்றொரு முடியாகவும் கூறப்படுகிறது . ஐயனை அடையும் போது இதில் உலகத் தேவைகளான உணவுப் பொருட்கள் குறைந்தும் கடைசியில் இறைபக்தி மட்டுமே மிஞ்சும் என்பதை உணர்த்தும் தத்துவத்தையும் குறிப்பிடுகின்றது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News