Join THAMIZHKADAL WhatsApp Groups
முன்தினம் இரவே தண்ணீரில் ஊற வைத்த பாதம்களை அடுத்த நாள் காலை எழுந்து சாப்பிடுவது பலரும் பின்பற்றி வரும் ஒரு ஆரோக்கியமான காலை பழக்கமாக இருந்து வருகிறது.
நினைவாற்றல், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மூளை ஆரோக்கியம் சார்ந்த பல விஷயங்களுக்கு பாதம் பருப்புகளை எடுத்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பாதாம் பருப்புகளில் ப்ரோட்டீன், ஃபைபர் சத்து, வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாதாம் பருப்பினால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி பலரும் பேசும் நிலையில், தினசரி ஒரு கையளவு பாதாம் பருப்பை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார்கள். ஆனால் உண்மையில் தினமும் எத்தனை பாதாம்களை சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது.
ஒரு நாளைக்கு எத்தனை பாதாம்களை சாப்பிட வேண்டும்?
தினசரி மிதமாக இல்லாமல் அதிக அளவு பாதாம்களை எடுத்து கொள்வது செரிமான பிரச்சனைகள், எடை அதிகரிப்பு மற்றும் பாதாம்களில் இருக்கும் ஆக்சலேட் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாவது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட கூடும். Max Healthcare-ஐ சேர்ந்த பிரபல உணவியல் நிபுணர் ரித்திகா சமதர் இது குறித்து ஒரு நிகழ்வில் பேசுகையில், பெரியவர்கள் ஒரு நாளைக்கு 20 -25 பாதாம் பருப்புகளை சாப்பிடுவது ஆரோக்கியமான விஷயம் கூறினார். அதே நேரம் குழந்தைகளுக்கு இந்த எண்ணிக்கை அதிகபட்சமாக 10 இருப்பது நல்லது. பாதாம்கள் மிகவும் ஆரோக்கியமானவை தான் ஆனால் அவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறோமா என்பதை நாம் கண்காணிக்க வேண்டும் என்று ரித்திகா விளக்கினார்.
பாதாம்களை எந்த நேரத்தில் சாப்பிடலாம்.?
பாதாம்களை சாப்பிட ஏதாவதொரு குறிப்பிட்ட நேரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு காலை உணவிற்கு பிறகு மதிய உணவுக்கு இடையிலோ அல்லது நாளின் எந்த நேரத்திலும் இதனை சிற்றுண்டி சாப்பிடுவது நல்லது தான். ஆனால காலை சீக்கிரமாகவோ அல்லது மாலை நேரத்திலோ பாதாம்களை சாப்பிடுவது நல்ல நேரமாக இருக்கும் என்றார்.
பாதாம்கள் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
பாதம் பருப்புகள் நாம் நல்ல கொழுப்புகள் என்று அழைக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளால் (monounsaturated fats) நிரம்பியுள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் என குறிப்பிடப்படும் LDL லெவலை குறைக்க உதவுவதோடு, HDL என்றழைக்கப்டும் நல்ல கொலஸ்ட்ராலின் லெவலை அதிகரிக்க செய்கிறது.
நம் உடலில் கொலஸ்ட்ரால் சமநிலையாக இருப்பது plaque உருவாவதை தடுக்கும் மற்றும் நமது வாஸ்குலர் சிஸ்டம்களில் உள்ள ரத்த நாளங்களை சுத்தமாக வைத்திருக்கும்.
மேலும் பாதாம்கள் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸை குறைக்கின்றன. மொத்தத்தில் பாதாம்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது.
எனவே தினசரி அடிப்படையில் பாதாம்களை எடுத்து கொள்வது எல்டிஎல் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறைக்க உதவும்.
No comments:
Post a Comment