Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்று ஃபேட்டி லிவர் அதிகரித்து வரும் நோய் பாதிப்பாக திகழ்கிறது.உடலில் கல்லீரல் முக்கிய உள் உறுப்பாக உள்ள நிலையில் மது,கொழுப்பு உணவுகளால் கல்லீரலின் ஆரோக்கியம் சிதைவடைந்து வருகிறது.
கொழுப்பு கல்லீரல்,கல்லீரல் வீக்கம்,கல்லீரலில் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனை இருந்தால் அதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ளலாம்.
1)எலுமிச்சை சாறு
2)வெது வெதுப்பான தண்ணீர்
தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் நீங்கி ஆரோக்கியமாக இருக்கும்.
1)நெல்லிக்காய் சாறு
2)தேன்
பெரிய நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் தேங்கிய நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கும்.கல்லீரலில் படிந்துள்ள கொழுப்புகள் மற்றும் வீக்கங்கள் குணமாகும்.
1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)தண்ணீர்
ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலக்கி குடித்தால் கல்லீரல் வீக்கம்,கொழுப்பு கல்லீரல்,கல்லீரலில் தேங்கிய கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும்.
1)வேப்பிலை
2)தண்ணீர்
ஒரு கப் வேப்பிலையை தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.
1)இஞ்சி சாறு
ஒரு கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் கல்லீரல் தொடர்பான பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும்.
1)மஞ்சள்
2)வெது வெதுப்பான நீர்
ஒரு கிண்ணத்தில் வெது வெதுப்பான நீர் தேவையான அளவு ஊற்றி 1/4 ஸ்பூன் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் சேர்த்து கலந்து குடித்தால் கல்லீரல் பிரச்சனை நீங்கும்.
No comments:
Post a Comment