Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 6, 2024

அரசு ஊழியர்கள் மீது வழக்கா..? இனி அனுமதி பெற வேண்டும்..!! உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு..!!


அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறை உரிய அனுமதி பெறாமல் வழக்கு தொடர்ந்ததாக கூறி, அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை தெலங்கானா உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ். ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு, "குற்றவியல் நடைமுறை சட்டம் 171ன் படி, அரசு ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்ய உரிய முன் அனுமதி பெறுவது அவசியமானது" என்று தெரிவித்தது. பின்னர் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எந்தவித அனுமதியும் பெறாமல் அமலாக்கத்துறை அரசு ஊழியர்கள் மீது சரமாரியாக வழக்கு தொடர்ந்து வந்த நிலையில், இதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது அமலாக்க துறைக்கு பெரும் பின்னாடைவாக பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News