"அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாமா" என 2023ஆம் ஆண்டின் கடைசியில் பிற்போக்குவாதிகள் கூக்குரலிட்டார்கள்.
அவர்களின் அச்சத்திற்கு காரணமானவர் தான் கடலூர் மாவட்டம் எம்.ஜி.ஆர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இரா.சசிகலா. இவர் பள்ளிக்கு சுடிதார் அணிந்து சென்ற காரணத்தினால் தான் "அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாமா" என்கிற பிற்போக்குத்தனமான விவாதம் எழுந்தது."
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி "பெரியார் மண்ணில் ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வர எவ்விதத் தடையும் இல்லை" என அறிவித்தோம்."
*_கல்வியிலும், சமூகத்திலும் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வரும் ஆசிரியர் இரா.சசிகலா அவர்களுக்கு எனது கைகளால் அவள் விகடன் சார்பாக "கல்வித் தாரகை" விருது வழங்கியதில் பெருமை அடைகிறோம்."
"பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் - அன்பில் மகேஸ் பொய்யாமொழி"`
No comments:
Post a Comment