Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 11, 2024

நுரையீரலில் கபம் கட்டிக்கொண்டு வருத்துகிறதா? மருந்துகளுக்கு கட்டுப்படவில்லையா? இதோ எளிய தீர்வு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


சளித்தொல்லை என்றால், சளி என்பது மூக்கு மற்றும் தொண்டையை பாதுகாக்கிறது. இது அதிகளவில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதில்லை.

பொதுவாக வைரஸ் கிருமிகளே இந்த தொற்றுக்கு காரணமாகின்றன. அதிகமாகிவிட்டால் அது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பெரியவர்களுக்கு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறையும், குழந்தைகளுக்கு அடிக்கடியும் சளித்தொற்றுகள் ஏற்படுகிறது. பெரும்பாலும் சளித்தொற்று 7 முதல் 10 நாட்கள் வரை இருக்கும். 

புகைப்பவர்களுக்கு இது கூடுதலான நாட்கள் இருக்கும். பெரும்பாலும் சளிக்கு மருத்துவ கவனம் தேவையில்லை. ஆனால் அறிகுறிகள் குறையாமல் மோசமடைந்து சென்றால், அதற்கு உடனடியாக நீங்கள் மருத்துவர்களை அணுகவேண்டும். 

மூக்கு மற்றும் தொண்டையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு கிருமிகள் காரணமாகின்றன. அவை சுவாச மண்டலத்தின் மேற்புறத்தில் தொற்றுக்களை ஏற்படுகிறது.

அறிகுறிகள்

வைரஸ் தொற்று ஏற்பட்ட 1 முதல் 3 நாட்களில் அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும்.

சளி ஒழுகுதல்

தொண்டையில் கரகரப்பு, புண், தொண்டை கட்டிக்கொள்வது

இருமல்

தும்மல்

உடல் நலன் பாதிக்கப்படுவது

உடல் வலி மற்றும் தலைவலி

குறைவான காய்ச்சல்

மூக்கில் உள்ள சளி, கெட்டியாக வாய்ப்பு ஏற்படும். அது மஞ்சள் அல்லது பச்சை நிறத்துக்கு மாறும். இவையனைத்து வழக்கமானது. இவை ஏற்பட்டால் உங்களுக்கு பாக்டீரியாக்கள் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம் கிடையாது.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

பெரும்பாலும் உங்களுக்கு மருத்துவ கவனம் தேவையில்லை. ஆனால் பின்வரும் பிரச்னைகள் ஏற்பட்டால், மருத்துவரிடம் செல்லவேண்டும்.

இந்த அறிகுறிகள் மோசமானால், சரியாகவில்லையென்றால் உடனே மருத்துவரிடம் செல்லவேண்டும்.

101.3 டிகிரி காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

காய்ச்சல் முடிந்து மீண்டும் காய்ச்சல் வந்தால் மருத்துவ கவனம் தேவை.

மூச்சுத்திணறல், மூச்சு வாங்குவது, வீசிங், தொண்டையில் கடும் புண், தலைவலி, சைனஸ் வலி ஆகியவை ஏற்பட்டால் மருத்துவரை அணுகவேண்டும்.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு சளி ஏற்பட்டால் பெரும்பாலும் மருத்துவ உதவி தேவையில்லை. ஆனால் கீழ்கண்ட பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

பிறந்த குழந்தைகள் முதல் 12 வாரம் வரையில் உள்ள குழந்தைகளுக்கு 100.4 டிகிரி காய்ச்சல் ஏற்பட்டால்,

காய்ச்சல் அதிகரித்தால், எந்த வயது குழந்தைக்கும் 3 நாளைக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால்,

அறிகுறிகள் தீவிரமானால், தலைவலி, தொண்டை வலி மற்றும் இருமல் ஏற்பட்டால்,

மூச்சுத்திணறல் அல்லது வீசிங் ஏற்பட்டால்,

காது வலி வந்தால்,

சாப்பிடப்பிடிக்காமல் போனால்,

மயக்கம், சோர்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவேண்டும்.

இந்த பிரச்னைக்கு ஒரு எளிய தீர்வு உள்ளது. அது என்னவென்று பாருங்கள்.

உங்களுக்கு நுரையீரலில் கபம் கட்டிக்கொண்டு மருந்துகளுக்கே கட்டுப்படவில்லையென்றால், நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய தீர்வை பின்பற்றலாம். அதற்காக நீங்கள் மாத்திரைகள் எடுக்கவேண்டாம். என்ன செய்வது என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

கருங்சீரகம் - கால் ஸ்பூன்

பூண்டு - 2 பல்

தேன் - அரை ஸ்பூன்

செய்முறை

கருஞ்சீரக்தை உரலில் சேர்த்து இடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதேபோல் பூண்டு பற்களையும் உரலில் சேர்த்து இடித்துக்கொள்ளவேண்டும். இரண்டையும் கலந்து அதில் தேனையும் சேர்த்து கலந்து சாப்பிட நுரையீரலில் கட்டிக்கொண்ட கபம் வெளியேறிவிடும். தொடர் இருமலும் கட்டுப்பட்டுவிடும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News