Join THAMIZHKADAL WhatsApp Groups
🏁 சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரிக்கிறது.
🏁 நம்
நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும்
அச்சுறுத்தலாக அமையும்
விஷயங்களை எதிர்த்து நிற்க, நமக்குள் இருக்கும்
உள்ளார்ந்த வலிமையையும், எதிர்த்து நிற்கும் திறனையும்
உறுதி செய்ய, இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
சர்தார் வல்லபாய்
படேல்
⚑ இந்தியாவின் 'இரும்பு மனிதர்" என்று
போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் 1875ஆம்
ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி குஜராத்தில் பிறந்தார்.
⚑ அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சனைகளுக்கு
உதவி பிரபலமானார்.
1917ஆம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி
பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது
காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை
உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.
⚑ குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய
அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது.
அரசு பணிந்து வரியை ரத்து செய்தது. படேலின் முதல் வெற்றி இது!
⚑ பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள்
நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப்
போராட்டத்திலும் படேலுக்கு
வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் 'சர்தார்" என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
⚑ சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக
கருதப்பட்டார். நவீன
இந்தியாவை உருவாக்கியவர்களில்
முக்கியமானவர். சுதந்திர
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
⚑ நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார். இவர் 75-வது வயதில் (1950) இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது..
No comments:
Post a Comment